விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து நிலவி வந்த பல்வேறு யூகங்களுக்கு அரசியல் களத்தின் முக்கியப் புள்ளிகள் தற்போது விளக்கமளித்துள்ளனர். குறிப்பாக வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக யாருடன் கைகோர்க்கும் என்பது குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், சில கட்சிகள் விஜய்யின் கொள்கை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளன. அதே சமயம் தற்போதைக்குத் தனித்துப் போட்டியிடுவதே தங்களின் இலக்கு என விஜய் தரப்பில் கூறப்பட்டாலும் தேர்தல் நெருங்கும் வேளையில் பலமான ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான ரகசியப் பேச்சுவார்த்தைகள் திரைக்குப் பின்னால் நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அரசியல் சூழலில் விஜய்யின் வருகை மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு சில மூத்த அரசியல் தலைவர்கள் விஜய்யுடன் இணைந்து செயல்படத் தயார் என வெளிப்படையாகவே தங்கள் விருப்பத்தை முன்வைத்துள்ளனர். இருப்பினும் யாரோடு கூட்டணி என்பது காலத்தின் கட்டாயம் என்ற ரீதியில் விஜய் தரப்பு மௌனம் காத்து வருவது தமிழக அரசியலில் ஒரு பெரிய எதிர்பார்ப்பையும் மர்மத்தையும் நீடிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில் விஜயின் தவெகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருக்கிறதா என கார்த்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அரசியலில் என்னென்ன ஆப்ஷன்ஸ் இருக்கிறது என்ற சிந்தனை இருக்கத்தானே செய்யும். மேலும் திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக 3வது செயல்திட்டம், அதிகார ஆசை, விரிவாக்கப்பட்ட சிந்தனை இருக்கக்கூடாதா என கேட்ட அவர், அதுபோன்ற சிந்தனைகள் இருந்தால்தான் நல்லது என கூறி உண்மையை உடைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த முகமது ரன்வீர் என்பவரது வீட்டில், குளிர்சாதன இயந்திரம் திடீரென வெடித்துப் பயங்கரத் தீ…
அமெரிக்க செனட் சபை, ரஷ்யாவையும் அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கொள்முதல் செய்யும் நாடுகளையும் குறிவைக்கும் புதிய தடைகள் சட்ட…
அரசு மருத்துவமனை ஒன்றிற்குப் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணிப் பெண்ணை, அங்குள்ள மருத்துவர்கள் மிகவும் ஆபாசமாகவும் இழிவாகவும் பேசிய சம்பவம் பெரும்…
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாலாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மல்லேஷ் தேபேகர், தான் அறுவடை செய்த கொண்டைக்கடலையை வீட்டில் உள்ள…
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பகலகுண்டே பகுதிக்கு உட்பட்ட ஹவாநூர் லே-அவுட்டில் உள்ள ஒரு மாடி வீட்டில், தாட்சாயிணி (52) என்ற…
ராமநாதபுரம் மாவட்டத்தில் கமிஷன் ஆசைக்காக வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டு, ஆன்லைன் மோசடி பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்பிய…