Categories: சினிமா

Karthi30 : வாரிசு நடிகருக்கு ஹிட் கொடுத்த இயக்குனர்.. அடுத்தப்படத்துக்கு அலேக்காக தூக்கிய கார்த்தி..

Spread the love

டாணாக்காரன் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான தமிழ் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிகர் போகும் புதிய படத்தின் தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒரு முக்கியமான இடத்தில் இருப்பது நடிகர் கார்த்திக். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நடித்து வரும் இவர் தற்போது 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது .

இதற்கிடையில் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்ற படத்திலும் நடித்து வருகின்றார். ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மாற்றி மாற்றி நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து கைவசம் சர்தார் 2, தீரன் அதிகாரம் 2, கைதி 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிக்க இருப்பதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகின்றது. மேலும் கார்த்திக்கின் 25 வது படமான ஜப்பான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி தோல்வியை தழுவியது.

இதனால் அடுத்த படத்தில் மிகவும் கவனமாக கதைகளை தேர்ந்தெடுத்து வருகின்றார். கார்த்திக் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தமிழ் இவர் இயக்கிய முதல் திரைப்படம் டாணாக்காரன். இந்த திரைப்படத்தில் பிரபுவின் மகனான விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க எம் எஸ் பாஸ்கர், லால் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து தனது இரண்டாவது படத்தை நடிகர் கார்த்திகை வைத்து எடுக்க முடிவு செய்து இருக்கின்றார் தமிழ். மேலும் 1960களில் நடைபெறும் கேங்ஸ்டர் பின்னணியில் கதை உருவாக உள்ளதாக கூறப்படுகின்றது. ட்ரீம் பிக்சர்ஸ் வாரியர் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

மேலும் இந்த படத்தின் ப்ரீ பிரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இயக்குனர் தமிழ் இயக்குனராக மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். ஜெய் பீம், வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mahalakshmi

Recent Posts

டேய் நிறுத்துடா… கண் எதிரே பறந்த கட்டுப்பாடற்ற கார் கொடுத்த… மரண பீதியில் உறைந்த பொதுமக்கள்… ஜெய்ப்பூரில் பரபரப்பு…!

ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் செப்டம்பர் 2 அன்று அதிவேகமாக வந்த கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பல வாகனங்கள் மீது…

10 minutes ago

ஐயோ… லாரி மோதி பள்ளி மாணவிகள் இரண்டு சகோதரிகள்… சம்பவ இடத்திலேயே பலி… ஹரியானாவில் நேர்ந்த சோகம்…!

ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் நேற்று காலை நேர்ந்த கோர சாலை விபத்தில், பள்ளிக் கல்வி பயின்று வந்த இரண்டு…

29 minutes ago

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

9 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago