அண்ணனுக்காக தனது கொள்கையை தூக்கியெறிந்த கார்த்தி…. இதுதான் காரணமோ…? ரசிகர்கள் ஷாக்…!

By Soundarya on கார்த்திகை 11, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ள நிலையில் பிரம்மாண்டமான வரலாற்று பின்னணியில் இந்த படம் உருவாகியுள்ளது. அடுத்த மாதம் 14ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன்களில் பட குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். படத்தின் ப்ரோமோஷனல் அடுத்தடுத்து மும்பை மற்றும் சென்னை என நடைபெற்று வருகிறது.

கங்குவா' திரைப்படம் தீபாவளியில் ஏன் வெளியாகவில்லை தெரியுமா...! | Do you  know why the movie 'Kanguva' is not released on Diwali...!

   

மும்பை மற்றும் டெல்லியில் சூர்யா உள்ளிட்ட படகு குழுவினர் ரசிகர்களை நேரில் சந்தித்தனர். அதேசமயம் சூர்யா தனிப்பட்ட முறையிலும் பல பேட்டிகளை கொடுத்துள்ளார். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் இரு வேறு கெட்டப்புகளில் சூர்யா படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பின்னணியில் படம் உருவாகியுள்ள நிலையில் இந்த காட்சிகள் படத்தில் மொத்தமாக 2 மணி நேரங்கள் அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

   

கங்குவா படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி உண்டா ? இவங்க மனசு வச்சா  கண்டிப்பா உண்டு - Cinemapettai

 

இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2 வருடங்களாக சூர்யாவின் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகாத நிலையில் சூர்யா ரசிகர்கள் கங்குவா திரைப்படத்தை ஆவலாக எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர். சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படமாக உள்ளது. இந்த நிலையில் கங்குவா படத்தில் சிறப்பு தோற்றத்தில் கார்த்தி நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் அந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று வெளியான ட்ரெய்லரில் கார்த்தி கேமியோ ரோலில் நடித்திருப்பதை ரசிகர்கள் உறுதிப்படுத்தினார்கள். கார்த்தி முகம் முழுவதுமாக டிரைலரில் காட்டப்படவில்லை என்றாலும் ரசிகர்கள் அது கார்த்தி தான் என்று கண்டுபிடித்துள்ளனர்.

இது படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகப்படுத்தி உள்ளது. இந்த படத்தில் கார்த்தி தன்னுடைய அண்ணன் சூர்யாவிற்காக தன்னுடைய கொள்கையை தூக்கி எறிந்துள்ளார் என்பது தெரிகிறது. அதாவது கார்த்தி தான் நடிக்கும்  டங்களில் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்ததே இல்லையாம். அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பதை கொள்கையாக வைத்துள்ளார். ஆனால் நேற்று வெளியான ட்ரெய்லரின் கார்த்தி புகைபிடிப்பது போல காட்சி இடம் பெற்றது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஷாக் ஆனார்கள். கதாபாத்திரத்திற்கு மிகவும் அவசியம் என்பதாலே தான் கார்த்தி புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்திருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.