தெலுங்கு திரை உலகில் காதல் நாயகனாக வலம் வந்தவர் சோபன்பாபு. இவர் சொக்காடு என்ற படத்தின் மூலமாக பட்டிதட்டி எங்கும் பிரபலமானார். இவருக்கு இந்த படத்தின் மூலமாக ஏராளமான பெண் ரசிகர்களும் இருந்தார்கள். அந்த காலத்து சாக்லேட் பாயாக வலம் வந்தவர். இவர் நாடகங்களில் நடித்து தன்னுடைய திறமையை மெருகேற்றிக் கொண்டார். அதன் பிறகு மெல்ல மெல்ல சிறு சிறு இடங்களில் நடித்து சினிமாவிற்குள் புகுந்தார். குறிப்பாக என் டி ஆர் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலமாக ரசிகர்களை கவர்ந்து அதன் பிறகு படிப்படியாக ஹீரோவாக உயர்ந்தார்.
)
தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து காதல் நாயகனாக உருவெடுத்தார். சோபன்பாபு மிகவும் நேசித்த நடிகைகளில் ஒருவர் ஜெயலலிதா. ஆனால் அவருடைய தாயாரால் சோபன்பாபு அவமானம் படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது சோபன் பாபுவின் நிறத்தை சுட்டிக்காட்டி அவமானப்படுத்தப்பட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில்சூப்பர் ஸ்டார் ஆன கிருஷ்ணா நடித்த முதல் திரைப்படம் குடாச்சாரி 116.

இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த சோபன்பாபுக்கு ஜோடியாக ஜெயலலிதாவை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தனர். அப்போதுதான் சினிமாவிற்குள் ஜெயலலிதா நுழைந்து படிப்படியாக வளர்ந்து வந்தார். ஆனால் அவருடைய தாயார் சந்தியா பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் ஆதிக்கத்தோடு இருந்து வந்தாராம். குடாச்சாரி 116 படப்பிடிப்பு தளத்திற்கு ஜெயலலிதாவோடு அவருடைய தாயாரும் வந்துள்ளார். அப்போது சோபன் பாபுவை பார்த்துள்ளார் ஜெயலலிதா தாயார்.

சோபன் பாபு முகத்தில் எண்ணெய் வழிந்து போய் வெயிலில் சற்று நிறம் குறைவாக காணப்பட்டுள்ளார். இதனால் ஜெயலலிதாவின் தாயார் என் மகளின் நிறம் என்ன? அவருடைய நிறம் என்ன? அவருக்கு ஜோடியாக என் மகள் நடிப்பதா என்று பேசியுள்ளார். மேலும் ஹீரோவை மாற்றினால் தான் என் மகள் நடிப்பா.ர் இல்லையென்றால் வேறு ஹீரோயினை பாருங்கள் என்றும் கூறியிருக்கிறாராம். அதுவும் சோகம் பாபு முன்பே அப்படி பேசி உள்ளார் .அந்த படத்தில் இருந்து சோபன் பாபுவை நீக்கி விட்டு கிருஷ்ணாவை நடிக்க வைத்துள்ளார்கள்.
