கார்த்தி தமிழ் சினிமாவில் பணியாற்றும் முன்னணி நடிகராவார். அவரது தந்தை சிவகுமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகர் மற்றும் இவரது சகோதரர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 2007 ஆம் ஆண்டு பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் கார்த்தி.

தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் மெட்ராஸ் போன்ற கமர்சியல் படங்களில் நடித்து பிரபலமானார். பையா சிறுத்தை சகுனி கொம்பன் தீரன் அதிகாரம் ஒன்று பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் கார்த்தி நடித்ததில் குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.
கார்த்தி நடித்ததில் மிக முக்கியமான படங்களில் ஒன்று சகுனி. 2012 ஆம் ஆண்டு அரசியல் சார்ந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் இது ஆகும். இந்த திரைப்படத்தில் ரோஜா சந்தானம் பிரகாஷ்ராஜ் ராதிகா வி எஸ் ராகவன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை சங்கர் தயாள் இயக்கியிருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது.

தற்போது கார்த்தி நடித்த சகுனி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சங்கர் தயாள் அவர்கள் திடீர் மாரடைப்பால் உயிரிழந்து இருக்கிறார். அவர் தான் இறுதியாக இயக்கி இருக்கும் படத்தின் செய்தியாளர் சந்திப்புக்கு போகும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அவரை மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து சென்றனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதித்து ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறி இருக்கின்றனர். அவருக்கு வயது 47 ஆகும். இந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த காலத்தில் யாருக்கு எப்போது இறப்பு வருகிறது என்று சொல்ல முடியவில்லை என சினிமா வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
