lexus

விஜய் முதல் அம்பானி வரை வைத்திருக்கும் LEXUS கார்… தளபதிக்கு பிடித்த இந்த காரில் இத்தனை Luxury அம்சங்களா….!

By admin on மார்கழி 19, 2024

Spread the love

சமீப காலமாக விஜய் தனது காரை மாற்றி புதிதாக ஒரு ஆடம்பர சொகுசு காரை வாங்கி இருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த காரில் தான் தற்போது எல்லா நிகழ்ச்சிகளுக்கும் கட்சி மீட்டிங்க்கும் கூட அவர் வருகிறார். இந்த காரை எதற்காக விஜய் வாங்கினார் அதில் இருக்கும் Luxury ஆன அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

தற்போது பயன்படுத்தும் இந்த புதிய சொகுசு காரானது LEXUS 350H மாடலாகும். நடிகர்கள் ராம்சரண் ரன்பீர் கபூர் அம்பானி வரை இந்த சொகுசு காரை வாங்கி இருக்கிறார்கள். விஜய் அவர்களே இந்த காரின் அம்சங்களை பார்த்து மிகவும் பிடித்து போய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்பனை செய்து விட்டு இதை வாங்கி இருக்கிறார். இந்த காரில் பயணம் செய்வது நாம் போயிங் விமானத்தில் இருக்கும் தனி கேபினில் பயணம் செய்வது போல் இருக்கும். அப்படிப்பட்ட அம்சத்தை இது கொண்டிருக்கிறது.

   

மேலும் இந்த LEXUS காரில் பயணிக்கும் போது உல்லாச கப்பலில் பயணிப்பது போலவே இருக்கும். இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் மத்தியில் இந்த கார் தற்போது பிரபலமாகி கொண்டு இருக்கிறது. இந்த லெக்சஸ் காரில் 4 சீட்டர் அம்சத்தை தான் விஜய் வாங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த 4 சீட்டர் அம்சத்தில் முன்னாடி டிரைவருக்கு தனி கேபின் பின்பக்கம் பாடி ஆனது Sliding Door உடன் மிகவும் நீளமாக இரண்டு லக்சரி பக்கெட் சீட்டுடன் வருகிறது. இது Recliner சீட் வடிவத்தில் இருப்பதால் படுத்து கொண்டே கூட பயணிக்க முடியும்.

 

மேலும் டிரைவருக்கும் பின்பக்கம் கேபினில் இருப்பவருக்கும் பிரைவேசிக்காக ஒரு கிளாஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. சீட்டுக்கு எதிர்ப்புறம் பெரிய ஸ்கிரீன் இருக்கிறது. அதற்கு தனியாக டச் ரிமோட்டம் இருக்கிறது. இந்த காரில் உள்ள அம்சத்தை டச் ரிமோட் மூலம் நம்மால் கண்ட்ரோல் செய்ய இயலும். டிரைவரிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் அந்த கிளாசை இறக்குவது பிறகு பிரைவசிக்காக கிளாஸை Blur செய்து கொள்வது போன்ற ம்சங்களும் இதில் இருக்கிறது.

இது மட்டுமல்லாமல் காரில் நாம் ரெஸ்ட் எடுக்க போகிறோம் என்றால் காரில் லைட்டுகளை குறைக்கவும் ஏசி ஃபேன் போன்றவற்றை control செய்யவும் டச் ரிமோட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் பயணிப்பது Smooth ஆக மிகவும் ஒரு சொகுசான அனுபவத்தை தரும். இந்த LEXUS மாடல் காரின் விலை தோராயமாக 2.50 கோடி ஆகும்.