BIG BREAKING: காவிரியில் நீர் திறக்க ரெடியாகும் கர்நாடகா….. தமிழகத்திற்கு 10,000 கனஅடி நீர் பாய்கிறது…. சற்றுமுன் அதிரடி…!

By Nanthini on ஆவணி 1, 2026

Spread the love

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், இன்று மாலைக்குள் அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட வாய்ப்புள்ளது. “இயற்கை யாருக்கும் சொந்தமில்லை, அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் நீர் திறப்புக்கு எதிரான போராட்டங்களை அனைவரும் கைவிட வேண்டும்” என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் தெரிவித்துள்ளார்.

நேற்று வரை தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது என்று உறுதியாகக் கூறி வந்த கர்நாடக அரசு, அணையின் நீர்மட்டம் உச்சத்தை தொட்டதால் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தண்ணீர் திறக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.