BIG BREAKING: தமிழகத்திற்கு ரூ.4,466 கோடி…. மத்திய அரசு வெளியிட்ட மெகா அறிவிப்பு…..!

By Nanthini on ஆவணி 1, 2026

Spread the love

மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்குமான வரிப்பகிர்வுத் தொகையாக மொத்தம் ரூ.1,09,019 கோடியை விடுவித்துள்ள நிலையில், இதில் தமிழகத்திற்கு ரூ.4,466 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 28 மாநிலங்களுக்கான இந்த நிதிப் பகிர்வுப் பட்டியலில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.19,208 கோடியும், பீகாருக்கு ரூ.10,845 கோடியும், மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.8,010 கோடியும் வழங்கப்பட்டுள்ளன. மாநில அரசுகள் தங்களின் மூலதனம் மற்றும் பல்வேறு கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளுக்கான செலவினங்களை விரைவுபடுத்தி துரிதப்படுத்துவதற்காகவே இந்த வரிப்பகிர்வுத் தொகை தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.