தமிழ் சினிமாவில், 1980களில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்கத்தில், கருமாரி கந்தசாமி தயாரிப்பில், இளையராஜா இசையில், ராமராஜன் – கனகா நடித்த இந்த படம், மிகப்பெரிய அளவில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கரகாட்டக்காரன் பாடல்கள் ஒலிக்காத இடமே இல்லை என்னும் அளவுக்கு, இளையராஜா இசை, பேசியது. குறிப்பாக இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி, படத்துக்கு இன்னும் பலம் சேர்த்தது. வாழைப்பழ காமெடிக்கு ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். இவர்களது காமெடிக்காகவே சென்ற ரிபீட் ஆடியன்ஸ் மிக அதிகம்.
அறிமுகமான முதல் படத்திலேயே வெற்றியின் உச்சம் தொட்ட நடிகை கனகா அடுத்து ரஜினிகாந்த் (அதிசய பிறவி) விஜயகாந்த் (கோவில் காளை), சரத்குமார் (சாமுண்டி) பிரபு (கும்பக்கரை தங்கையா) என பல படங்களில் நடித்தார். பிறகு திடீரென தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போனார். ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு ஆளில்லாத பங்களாவில் தனிமையில் வாழ்ந்து வருகிறார். கனகாவின் தாயார் மிக பிரபலமான தமிழ் நடிகை தேவிகா. இவர் எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன் போன்றவர்களுடன் நடித்தவர். 1967ல் தேவதாஸ் என்ற உதவி இயக்குநரை திருமணம் செய்த தேவிகா, 15 ஆண்டுகளுக்கு பிறகு அவரை விவகாரத்து செய்தார். பின் தேவிகாவும், கனகாவும் அந்த ஆழ்வார்பேட்டையில் ஒன்றாக இருந்த நிலையில், அம்மா தேவிகா மறைவுக்கு பிறகு கனகா அந்த பங்களாவில் தனி ஒருவராக வாழ்ந்து வருகிறார்.
இதுகுறித்து நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் கூறுகையில், ஒருமுறை கனகாவை பேட்டி எடுக்கச் சென்ற போது, அவர் தனது திருமண வாழ்க்கை குறித்து சொன்னார். கலிபோர்னியாவை சேர்ந்த என்ஜினியர் முத்துக்குமார் என்பவரை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், சில ஆண்டுகளில் அவர் ஏமாற்றிவிட்டு, கலிபோர்னியாவுக்கு ஓடி விட்டதாகவும் கூறினார். அவரை சமீபத்தில் சந்தித்த குட்டி பத்மினி, இப்படி தனிமையில் இருக்காதே, அந்த பங்களாவை விற்றுவிட்டு பிளாட் ஒன்றில் குடியேறி விடு. அப்போதுதான் அக்கம் பக்கத்தில் இருந்து பேசி பழகி, மனசை ரிலாக்ஸ் ஆக வைத்துக்கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார். கனகாவும் அதை ஒத்துக்கொண்டதாக கூறியிருக்கிறார் என்று அதில் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…