Categories: சினிமா

இதனால் தான் நான் கல்யாணம் பண்ணிக்கல.. முதல் முறையாக திருமணம் குறித்து மனம் திறந்த கோவை சரளா..

Spread the love

நடிகை கோவை சரளா, தமிழ் சினிமாவில் மனோரமாவுக்கு அடுத்தபடியாக காமெடியில் நீண்டகாலமாக நீடித்திருக்கும் ஒரு நடிகை. 1980, 90களில் கவுண்டமணி, செந்தில், எஸ்எஸ் சந்திரன் போன்றவர்களுடன் அதிகமாக நடித்தவர். பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த சதிலீலாவதி படத்தில், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். இப்போதும் ராகவா லாரன்ஸ் போன்ற முக்கிய நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கிறார். ஆறு மாதங்களுக்கு முன் வெளிவந்த செம்பி என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். கோவைசரளா திருமணமே செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து ஒரு நேர்காணலில் அவர் கூறுகையில், கல்யாணம் பண்ணினவங்க எல்லாரையும் பார்த்து இப்ப சிரிச்சுட்டு இருக்கேன். எப்படி இருந்தாலும் மனுஷன் தனியாக வாழ்ந்துதான் ஆகணும். கணவர் கடைசி வரைக்கும் வரப்போறது இல்லை. எப்படியும் ஒரு கட்டத்துல பிரிஞ்சுதான் ஆகணும். கையை பிடிச்சுக்கிட்டே கடைசி வரைக்கும் வாழ முடியாது. கல்யாணம் பண்ணிட்டு கஷ்டபடறவங்களை பார்த்துதான், இப்படி கஷ்டப்படறாங்களே என்றுதான் பீல் ஆவேன். நான் கல்யாணம் பண்ணலையேன்னு பீல் பண்ணினதே இல்லை. பீல் பண்ற சீனே இங்க இல்லை.

என்னை கல்யாணம் பண்ணாம, ஒருத்தர் தப்பிச்சுட்டாருன்னு தான் எனக்கு தோணும். சின்ன வயசுல இருந்து ஆன்மீகத்துல ஒருவேளை நாட்டம் இருந்திருக்கலாம். அப்புறம், எனக்குன்னு அச்சீவ்மென்ட்ஸ் இருந்துச்சு. நாளைக்கு நாலு பேருக்கு தெரியற மாதிரி நான் வாழ வேண்டும். பெரிய அளவில் நான் கவனிக்கப்படணும்ங்கற ஆசை எனக்கு இருந்துச்சு. அந்த ஒரு நிலையில, குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி, என்னோட நோக்கமெல்லாம் ஒரே கோணத்துல இருந்துச்சு. அதனால, கல்யாணம்ங்கற அந்த பக்கமே என் கவனம் போகலை என்று சொல்லி இருக்கிறார் நடிகை கோவை சரளா.

admin

Recent Posts

“உங்க ஆட்சி லட்சணம் என்னாச்சு?” – திமுகவை மடக்கிப் பிடித்த தவெக…. இணையத்தையே அதிரவைக்கும் தவெக vs திமுக மோதல்….!

தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…

1 minute ago

ஐயோ… ரேபிஸ் தாக்குதலா?… வீதி வழியா போகவே பயமா இருக்கு… 5 கிராமங்களை அலறவிட்ட மர்ம நாய்… பீகாரில் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…

2 minutes ago

“அன்பில் மகேஸுக்கு அடுத்து கில்லியில் சிக்கப்போகும் அந்த 3 சீனியர்கள் யார்?”…. பக்காவாக காய் நகர்த்தும் CM விஜய்…. அதிர்ச்சியில் உறைந்த திமுக….!

திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…

6 minutes ago

ஏய்… கத்தக் கூடாது… பேசாமல் இரு… ஓடும் காரில் 20 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… 2 மணி நேரப் பேரதிர்ச்சி… ம . பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…

8 minutes ago

“10 நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க?”…. NDMA-விடம் மாட்டிக்கொண்ட தமிழ்நாடு அரசு…. வைரலாகும் ஷாக் ரிப்போர்ட்….!

அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக…

10 minutes ago

“என்னை போட்டுத் தள்ள பார்க்குறாங்க”… திமுகவை நாங்கதான் ஜெயிக்க வச்சோம்…. அமைச்சர் விஸ்வநாதனின் பகீர் வாக்குமூலம்…. கூட்டணிக்குள் விழுந்தது பேரிடி….!

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைத் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும்…

14 minutes ago