சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பொது இடங்களில் பெண்களை ரகசியமாக ஆபாச வீடியோ எடுத்த நபரை, 19 வயது இளம்பெண் ஒருவரின் தைரியமான நடவடிக்கையால் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண், தனது தாயாருடன் கடைவீதிக்குச் சென்றபோது, கானாடுகாத்தானைச் சேர்ந்த செந்தில்குமார் (45) என்பவர் தங்களைப் பின்தொடர்ந்து ரகசியமாகச் செல்போனில் படம் பிடிப்பதைக் கண்டுபிடித்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாகத் தட்டிக்கேட்டபோது, “இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன், போலீசுக்குச் சென்றால் கொன்றுவிடுவேன்” எனச் செந்தில்குமார் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால், அந்த மிரட்டலுக்குச் சிறிதும் அஞ்சாத அந்த இளம்பெண், உடனடியாக பள்ளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், அப்பகுதியில் சுற்றித்திரிந்த செந்தில்குமாரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட செந்தில்குமாரிடம் இருந்த இரண்டு செல்போன்களைப் பறிமுதல் செய்து சோதனையிட்ட போலீசாருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. பேருந்து நிறுத்தங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகள் எனப் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் மறைந்திருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களையும் கல்லூரி மாணவிகளையும் அவர் ரகசியமாக ஆபாசக் கோணங்களில் வீடியோ எடுத்திருப்பது தெரியவந்தது. குறிப்பாக நைட்டி அணிந்துவரும் பெண்களை இலக்கு வைத்து இவர் தொடர்ந்து இதுபோன்று வீடியோ எடுத்து ரசித்து வந்துள்ளார்.
இதையடுத்து பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் செந்தில்குமாரைச் சிறையில் அடைத்தனர். இவரின் இந்தக் கேவலமான பழக்கத்தைக் கண்டித்து, அவரது மனைவி விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றதும், கணவன் திருந்தாததால் அவரைப் பிரிந்து தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டதும் விசாரணையில் அம்பலமானது. கைதான நபரிடம் வேறு ஏதேனும் மிரட்டல் அல்லது பணப்பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…