ஐயோ அம்மா… காந்தாரா படம் முடிந்ததும் ஆக்ரோஷமாக கத்தி கூச்சலிட்ட இளம் பெண்… தியேட்டரில் நடந்த வினோத சம்பவம்… ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 9, 2025

Spread the love

இந்திய திரைப்பட உலகம் மீண்டும் ஒருமுறை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. அதாவது சமீபத்தில் வெளியான காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தைப் பார்த்த சிறுமியின் எதிர்பாராத செயல் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவில், திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் திடீரென்று படம் முடிந்ததும் கத்தி நடுக்கத்துடன் நடந்து கொண்டார். திரைப்படத்தின் ஆழமான புராண காட்சிகள் மற்றும் தீவிரமான பக்தி உணர்வுகள் சிறுமியை மன அழுத்தத்திற்குள் எடுத்ததாக பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அந்த சிறுமியை அமைதி படுத்த முயன்ற பார்வையாளர்களும் குடும்பத்தினரும் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.

திரையரங்கில் சிறுமி தொடர்ந்து சத்தமிட்டு பதட்டத்தில் நடுங்கியதால் உடனடியாக அவரை திரையரங்கில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து காந்தாரா படத்தின் தாக்கம் குறித்த விவாதம் தீவிரமாக எழுந்துள்ளது. இந்த படம் மிகுந்த ஆன்மீக தாக்கம் கொண்டது என்று ஒரு சிலர் கூறி வருகிறார்கள். திரைப்படம் ஒரு கலை வடிவமாக இருந்தாலும் அதன் தாக்கம் மனதையும் உணர்வுகளையும் எவ்வளவு ஆழமாக தொடுகிறது என்பதை இந்த சம்பவம் தெளிவுபடுத்தியுள்ளதாக பலரும் கூறும் நிலையில் சினிமா உலகிலும் இது புதிய பார்வையை உருவாக்கியுள்ளது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

PATILG  பதிவைப் பகிர்ந்துள்ளார் (@iam_patilg)