மனைவிக்கு இப்படி ஒரு பரிசா?… 2 சாக்கு மூட்டை நிறைய காசு தான்… நகைக் கடைக்காரரையே அசர வைத்த கணவன்… வைரலாகும் வீடியோ…!

By Nanthini on கார்த்திகை 24, 2025

Spread the love

கான்பூரில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. கான்பூரில் உள்ள நகைகடையில் சமீபத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அபிஷேக் யாதவ் (22) என்ற பான் கடைக்காரர் தன்னுடைய மனைவிக்கு பரிசாக தங்க சங்கிலி வாங்குவதற்கு இரண்டு பெரிய சாக்கு மூட்டைகளில் நாணயங்களை கொண்டு வந்து கடைக்காரரை அசர வைத்தார். திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிய நிலையில் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்த பத்து ரூபாய் நாணயங்களை நோட்டுக்களாக மாற்றாமல் ஓராண்டு முழுவதும் அபிஷேக் சேமித்து வைத்துள்ளார். மனைவி பெற்றோரின் இல்லத்தில் இருந்ததை தொடர்ந்து நகைக்கடைக்குச் சென்றுள்ளார்.

அபிஷேக் கொண்டு வந்த இரண்டு சாக்கு மூட்டைகளிலும் சேர்த்து மொத்தமாக 5,290 நாணயங்கள் இருந்த நிலையில் அதன் மதிப்பு மட்டும் 1.05 லட்சமாகும். ஆனால் அவர் தேர்ந்தெடுத்த தங்க சங்கிலியின் விலை 1.25 லட்சம். நீதியை தவணைகளில் செலுத்தலாம் என்று கடை உரிமையாளர் மகேஸ்வர்மா தெரிவித்ததை தொடர்ந்து அபிஷேக் அந்த செயினை ஆர்டர் செய்தார். இவர் கொண்டு வந்த நாணயங்களை எண்ணுவதற்காக 2 மணி நேரத்திற்கு மேலாக பணியாளர்கள் ஈடுபட்டனர். இவ்வளவு பெரிய பரிசை வாங்க வேண்டும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று அபிஷேக் கூறியுள்ளார். அவருடைய மனைவியிடம் கொண்ட உண்மையான அன்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தற்போது சமூக வலைத்தளத்தில் பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது.