“என்னால தாங்க முடியல…” SIR பணி சுமையால் BLO தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

By Devi Ramu on கார்த்திகை 24, 2025

Spread the love

மேற்கு வங்கத்தில் நதியா மாவட்டத்தில் 52 வயதான ரிங்கு தாராஃப்தார் என்ற பகுதிநேர ஆசிரியரும், BLO-வும் அதிகப்படியான பணி அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், “எனது மரணத்திற்குக் காரணம் தேர்தல் ஆணையம்தான். நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிப்பவள் இல்லை. சாதாரண பணிதான்.  இவ்வளவு சிறிய வேலைக்காக என்னால் இந்த மனிதத்தன்மையற்ற அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை. மனதளவில் நான் நொறுங்கிவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு வடக்கு வங்கத்தில் மற்றொரு BLO இதேபோன்ற காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அச்சத்தை அதிகரித்துள்ளது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “இந்த SIR பணிக்கு இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்?” என்று தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.