சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில், அண்மையில் விளையாட்டுத் துறையையே உலுக்கும் வகையிலான அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சர்வதேச அளவில் தங்கம் வென்று நாடு முழுவதும் பிரபலமான கபடி வீராங்கனை கார்த்திகாவின் பயிற்சியாளரான ராஜு என்பவர் மீது, சக கபடி வீராங்கனை ஒருவர் செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி சிறுமிகளுக்கு கபடி பயிற்சி அளித்து வந்த ராஜு, கடந்த 2025ஆம் ஆண்டு பஹ்ரைனில் நடந்த ஜூனியர் கபடி போட்டியில் அவரது மாணவி தங்கம் வென்றதைத் தொடர்ந்து, திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களால் பெரிதும் கௌரவிக்கப்பட்டு, ஊக்கத்தொகைகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புகாரளித்த 17 வயது சிறுமியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் போலீசாரையே உலுக்கும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெற்றோர் இல்லாத நிலையில் தனது பாட்டியின் ஆதரவோடு வசித்து வரும் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள், இந்த மாதத்தில் மட்டும் பயிற்சியாளர் ராஜு மூன்று முறை அத்துமீறி நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், “என்னுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே மாவட்ட மற்றும் மாநில அளவிலான கபடி போட்டிகளில் விளையாட அனுமதிப்பேன்” என்று கூறி, அந்தச் சிறுமியைத் தனது பாலியல் இச்சைக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்தி, மிரட்டியுள்ளதும் அம்பலமாகியுள்ளது.
இதைவிடக் கொடுமையாக, தனது பாலியல் அத்துமீறல்களுக்குப் பணியும் சிறுமிகளை மட்டுமே கபடி அணியில் வைத்துக் கொண்டு, மறுக்கும் சிறுமிகளை சக வீராங்கனைகள் முன்னிலையில் கடுமையாக அடிப்பது, திட்டுவது போன்ற செயல்களில் ராஜு ஈடுபட்டுள்ளார். “உனக்கெல்லாம் கபடி வராது, நீ எதற்கு ஆட வருகிறாய்?” என்று மன ரீதியாக அவர்களை ஒடுக்கி, அணியில் விளையாட விடாமல் தடுத்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட கபடி வீராங்கனை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அறிந்தவுடன், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகப் பயிற்சியாளர் ராஜு தற்போது தலைமறைவாகியுள்ளார்.
ஆரம்பத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதியாகப் பார்க்கப்பட்டு, பின்னர் கல்வியிலும் விளையாட்டிலும் சாதித்து நாடு முழுவதும் பெருமை தேடித் தந்த கண்ணகி நகரின் பெயர், இந்தச் சம்பவத்தால் தற்போது பொதுமக்களிடையேயும் விளையாட்டு உலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று காலை காவல் நிலையம் சென்றபோது, ஆய்வாளர் வருவார் என்று கூறி பல மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டதாகவும், 24 மணி நேரத்தைக் கடந்தும் வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் அலட்சியம் காட்டியதாகவும் அந்த வீராங்கனை வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, தலைமறைவாக உள்ள பயிற்சியாளரைக் கைது செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…