ஒரே மெட்டு.. கன்னடத்தில் 7 நாட்கள் ஆக்கிய பாடலாசிரியர்… தமிழில் ஒரு நொடியில் பாட்டெழுதிய கண்ணதாசன்..

By vinoth

Updated on:

1973-ம் ஆண்டு தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளியான படம் பொண்ணுக்கு தங்க மனசு. சிவக்குமார், ஜெயசித்ரா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஜி.கே.வெங்கடேஷ் இசையமைத்துள்ளார். பாடல்களை கண்ணதாசன், முத்து லிங்கம், பூவை செங்குட்டுவன் ஆகியோர் எழுதினர்.

இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு ஹிட் பாட்டுதான் ‘தேன் சிந்துதே வானம்’. இந்த பாடலுக்கு பின்னால் உள்ள ஒரு மிகச்சுவாரஸயமான தகவலை அந்த படத்தில் உதவி இசையமைப்பாளராக பணியாற்றிய இளையராஜா பகிர்ந்துள்ளார்.

   

இது குறித்து அவர் ”இந்த படத்தில் அந்த சூழலுக்கு டியூன் கன்னடத்தில் ராஜ்குமார் படத்திற்காக அமைக்கப்பட்ட ட்யூன் பொருத்தமாக இருக்கும் என ஜி கே வெங்கடேஷ் நினைத்தார். அந்த  டியூனுக்காக கன்னட பாடலை எழுத அந்த கவிஞர் கிட்டத்தட்ட 7 நாட்கள் எடுத்துக்கொண்டு எழுதி முடித்திருந்தார். அத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டாலும், அந்த பாடலை அவர் சரியாக எழுதவில்லை.

ஆனால் அதே டியூனை மொட்டை மாடியில் வாடகைக்கு தங்கியிருக்கும் நாயகனுக்கும், அந்த வீட்டு உரிமையாளர் பெண்ணுக்கும் காதல். ஒருநாள் மழை வரும்போது காயவைத்த துணியை எடுக்க நாயகனும் நாயகியும் வரும்போது ரொமான்ஸ் உருவாகி இருவரும் கட்டிப்பிடித்து விடுகின்றனர் என்ற பொன்னுக்கு தங்கமனசு பயன்படுத்தினோம்.

இந்த மெட்டை சொன்னதும் உடனே கண்ணதாசன் “தேன் சிந்துதே வானம்” என பல்லவி வரிகளை சொன்னார். இதைக் கேட்ட நான் இந்த வார்த்தை டியூனுடன் சேருமா என்று யோசித்து அதன்பிறகு பாடி பார்த்தேன். கச்சிதமாக பொருந்தியது அதன்பிறகு முழு பாடலையும் கண்ணதாசன் சில நிமிடங்களுக்குள் எழுதி எங்களுக்குக் கொடுத்தார். இந்த உலகிலேயே கண்ணதாசன் அளவுக்கு வேகமாகப் பாடல் எழுதும் கவிஞர்கள் யாருமே இல்லை என்பதுதான் உண்மை” என அவர் கூறியுள்ளார்.