Categories: சினிமா

கண்ணதாசன் பாட்டை கேலி செய்து நிராகரித்த இசையமைப்பாளர்கள்.. ஆனா ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் கொடுத்த பாட்டு..!

Spread the love

மனித வாழ்வின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தன்னுடைய எழுத்துக்கள் மூலமாக உயிர் கொடுத்தவர்தான் கவிஞர் கண்ணதாசன். எழுத்தாளர், கவிஞர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் இருந்த இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும் அவர் எழுதிய ஒரு பாடலை இசை அமைப்பாளர் கேவி மகாதேவன் தொடங்கி எம் எஸ் விஸ்வநாதன் வரை பல இசை அமைப்பாளர்கள் கேலி செய்து நிராகரித்துள்ளனர். ஆனால் இந்த பாடல் மீது கண்ணதாசனுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்துள்ளது. அந்த நம்பிக்கையின் காரணமாக பல இசையமைப்பாளர்களிடம் கொடுத்துள்ளார். அதன்படி 1962 ஆம் ஆண்டு வெளியான பலே பாண்டியா திரைப்படத்தில் இந்த பாடலை சேர்க்குமாறு கண்ணதாசன் கூறியுள்ளார்.

ஆனால் படத்தின் இசையமைப்பாளரான எம் எஸ் வி பாடலை படித்துவிட்டு இது மக்களுக்கு புரியாது என்று சொல்லி நிராகரித்துள்ளார். ஆனாலும் கண்ணதாசன் அவரிடம் வலுக்கட்டாயமாக இந்த பாடலை சேர்க்க சொல்ல அப்போது படத்தின் இயக்குனர் பந்துலு அங்கே வந்துள்ளார். இந்தப் பாடலை பார்த்துவிட்டு பாடல் நன்றாக இருக்கிறது என்று அவர் கூறிய நிலையில் மக்களுக்கு புரியுமா என்று கேட்டுள்ளார். அதெல்லாம் புரியும் அதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன் என்று சொல்ல கண்ணதாசனின் நம்பிக்கையை பார்த்து பி ஆர் பந்துலு மற்றும் எம் எஸ் வி இருவரும் பிடிக்காமல் இந்த பாடலை சேர்த்துக் கொள்ள ஒப்புக்கொள்கின்றனர்.

அந்தப் பாடல் படத்தில் இடம்பெற்றதை தொடர்ந்து திரையரங்கில் அந்த பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அந்தப் பாடல் தான் பலே பாண்டியா படத்தில் இடம் பெற்ற “அத்திக்காய் காய் காய்” என்ற பாடல். இந்தப் பாடலில் காய்கறிகள் பற்றி கூறியுள்ளதாக மக்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காக பாடல் முழுவதும் நிலவைப் பார்த்து பாடுவது போலவே காட்சிகள் அமைந்திருக்கும். இந்தப் பாடல் முழுவதும் நிலவுக்கு அறிவுரை சொல்வது போல அமைந்திருக்கும்.

Nanthini

Recent Posts

கடவுளே… கல்யாணமான சில வாரத்துல இப்படியா ஆகணும்?… அமெரிக்காவில் சோகமாக முடிந்த… இளைஞரின் வாழ்க்கை… நெஞ்சை பதபதக்க வைக்கும் சம்பவம்…!

அமெரிக்காவில் உயர்கல்வி முடித்து பணியாற்றி வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் முகம்மத் ஜாபர் உசேன், மசாசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள…

4 minutes ago

அடப்பாவிங்களா… நடுரோட்டுல என்னடா கூத்து இது?… கார் சாகசம் செய்து அலப்பறை கூட்டிய வாலிபர்கள்… ஹைதராபாத்தில் ஷாக்கிங் சம்பவம்…!

ஹைதராபாத்தின் அத்தாப்பூர் பகுதியில் உள்ள சிந்தல்மெட் டி-மார்ட் கூட்ரோடு அருகே, இளைஞர்கள் சிலர் காரில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டு…

30 minutes ago

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

9 மணத்தியாலங்கள் ago