சந்திரபாபுவால் கம்பெனியை இழுத்து மூடிட்டு அழுத கண்ணதாசன்.. எல்லாத்துக்கும் காரணம் அந்தப் படம் தான்..!

By Nanthini on தை 21, 2025

Spread the love

சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ள கண்ணதாசன் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் சில படங்களை தயாரித்துள்ளார் என்பதும் பலரும் அறியாத உண்மைதான். கண்ணதாசன் மொத்தம் ஐந்து திரைப்படங்களை தயாரித்துள்ளார். அதில் ஒன்றுதான் சந்திரபாபு நடித்த கவலை இல்லாத மனிதன். இந்தத் திரைப்படத்தை தவிர மற்ற படங்கள் எல்லாம் அவருக்கு ஓரளவுக்கு கை கொடுத்தன. ஆனால் கவலை இல்லாத மனிதன் மட்டும்தான் அவருக்கு மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. நான் கவலை இல்லாத மனிதன் என்ற படம் எடுத்தேன், ஆனால் பல கவலைகளால் பாதிக்கப்பட்டேன் என்று தனக்கே உரிய கேள்வி மற்றும் நயத்துடன் கண்ணதாசன் ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார்.

மதுரையின் பந்தத்தை பாடல்களில் வெளிக்கொணர்ந்த கவியரசர் | இன்று கண்ணதாசன் நினைவு தினம் | Kannadasan Memorial Day - hindutamil.in

   

 

   

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நாயகன் சந்திரபாபு பல நேரங்களில் படப்பிடிப்புகே வராமல் இருந்ததால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தின் சந்திரபாபு ஒரு பாடலை பாடிய போதிலும் அவரது பெயர் பாடகர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. அதேபோல் இந்த படத்திற்கு கதை மற்றும் வசனம் எழுதிய தயாரித்த கண்ணதாசனின் பெயர் கூட டைட்டிலில் இடம் பெறவில்லை என்பது ஆச்சரியம் கலந்த வருத்தம். கடந்த 1960 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சந்திரபாபு நாயகனாக நடித்தார். காமெடி மட்டுமல்லாமல் சீரியஸ் ஆகவும் அவரது கேரக்டர் அமைக்கப்பட்டு இருந்தது.

 

kavalai illatha manithan

எம் ஆர் ராதா, டி எஸ் பாலையா, டி ஆர் ராமலிங்கம் ஆகியவருடன் கண்ணதாசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு சந்திரபாபு சரியாக வராததால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தன்னுடைய திரை வாழ்க்கையில் சந்திரபாபு கஷ்டப்படுத்தியது போல் யாருமே படுத்தியது இல்லை என்று கண்ணதாசனை கூறியுள்ளார். அதேபோல் அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த காலத்தில் நான் அழுதது போல் வேறு எந்த காலத்திலும் அழுததில்லை. என்னுடைய பங்காளி வெள்ளை பேப்பர்களில் எல்லாம் கையெழுத்து வாங்கி என்னை பெரிய கடங்காரன் ஆக்கினான். கடைசியில் ஆறு லட்சம் ரூபாய் கடனோடு கம்பெனியை இழுத்து மூடினேன். அந்தப் படத்தால் நான் பொருளாதார கஷ்டத்திற்கு ஆளானது மட்டுமல்லாமல் 39 வழக்குகளையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என கண்ணதாசனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.