லண்டனில் போய் நடிப்பை கற்றவர்… ஆனாலும் பயன் இல்லை… நடிகர் ஜீவன் சினிமாவில் சறுக்கியது எப்படி தெரியுமா…?

By admin on தை 20, 2025

Spread the love

ஜீவன் என்று அழைக்கப்படும் விஜயபாஸ்கர் ரங்கராஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றிய நடிகராகவர். ஆரம்பத்தில் பல்கலைக்கழகம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜீவன். அதைத்தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய காக்க காக்க திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு வாய்ப்பளித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் ஜீவன்.

   

காக்க காக்க படத்தில் பிரபலமாக இருந்தாலும் இவரது முக பாவனைக்கு நடிப்பு வரவே இல்லை என்று பல விமர்சனங்களை எதிர்கொண்டார். அதற்காக லண்டனில் சென்று நடிப்பையும் கற்றுக் கொண்டார் ஜீவன். நடித்தால் ஹீரோவாக தான் நடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் காத்திருந்தார் ஜீவன். அதன்படி 2006 ஆம் ஆண்டு திருட்டுப் பயலே என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார்.

   

2007 ஆம் அண்டு நான் அவன் இல்லை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பேரும் புகழும் பெற்றார். இந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. வித்தியாசமான கதை கத்தை கொண்டு இருந்ததால் இந்த படம் வெற்றி பெற்றது. தொடர்ந்தது மச்சக்காரன், நான் அவன் இல்லை 2 ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 2010 க்கு பிறகு அவருக்கு சரிவர வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

 

ஜீவன் எல்லா படத்திலும் ஒரே உடல் மொழியையும் ஒரே முகபாவனையும் பயன்படுத்துகிறார் எந்தவித மாற்றமும் அவர் செய்யவில்லை என்று பலர் விமர்சித்தார்கள். அவருக்கு இரண்டாம் கட்ட நடிகராக நடிக்க வாய்ப்பு வந்த போதும் அவர் நடித்தால் நாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என்ற முடிவோடு இருந்ததால் சினிமாவில் காணாமலே போய்விட்டார் என்று சொல்லலாம். எப்போதும் விமர்சனங்கள் வரலாம் அந்த விமர்சனங்கள் உண்மையா பொய்யா என்று கண்டறிந்து உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை திருத்திக் கொண்டால் தான் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்பதற்கு ஜீவன் ஒரு உதாரணமாக இருக்கிறார்.