கண்ணதாசன் மரணத்திற்கு பின்னால் இப்படி ஒரு ரகசியம் இருக்கா?.. இதுவரை பலரும் அறியாத உண்மை தகவல்..!

By Nanthini on சித்திரை 1, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்தவர்தான் கண்ணதாசன். கிளாசிக் சினிமாவின் முன்னணி நடிகர்களான எம்ஜிஆர் மற்றும் சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். காலங்கள் பல கடந்தாலும் கண்ணதாசன் எம்ஜிஆருக்காக எழுதிய பல பாடல்கள் இன்றைய ரசிகர்கள் ரசிக்கும்படி உள்ளது. வாலி வருவதற்கு முன்பே எம்ஜிஆர் இன் அனைத்து அரசியல் பாடல்களிலும் தனது வார்த்தை ஜாலத்தை வைத்து வெற்றியை கொடுத்தவர்தான் கண்ணதாசன். அதேபோல கண்ணதாசன் மீது அதிகமான நட்பு வைத்திருந்த எம்ஜிஆர் அவரை அரசவை கவிஞர் ஆக்கி அழகு பார்த்தார்.

Remebering Kannadasan| எம்.ஜி.ஆருக்கு அமைத்துக் கொடுத்த அரசியல் அஸ்திவாரம்!  | Kavingar kannadasan death anniversary - kamadenu tamil

   

தமிழ் சினிமாவில் இதுவரை பல நூறு கட்டுரைகள், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியவர். இவருடைய திறமைக்காக எம்ஜிஆர் இவரை தமிழக அரசின் அரசவை கவிஞராக பதவி கொடுத்து கவுரவப்படுத்தினார். சாகித்திய அகாடமி விருது பெற்ற கண்ணதாசன் தன்னுடைய 54 வயதில் மிகுந்த மனவேதனையோடு இறந்து போனார்.

   

நான் இறந்த பிறகு என்னை வாழ்த்தி பாடுங்கள்... கண்ணதாசனுக்கு வேண்டுகோள் வைத்த  சந்திரபாபு : காரணம் என்ன?

 

இவருடைய இறப்புக்கு அவருடைய குடிப்பழக்கமே முக்கிய காரணம் என்று பலரும் கூறினார்கள். ஆனால் இவருடைய இறப்புக்கு பின்னால் ஒரு உண்மை சம்பவம் ஒளிந்துள்ளது. அதாவது சந்திரபாபுவை வைத்து கவலை இல்லாத மனிதன் என்ற திரைப்படத்தை கண்ணதாசன் தயாரித்திருந்தார். ஆனால் கவலை இல்லாத மனிதன் திரைப்படம் கொடுத்த தோல்வியால் கண்ணதாசன் வாழ்வில் கவலைகள் மூழ்கடிக்க செய்தது. அதன் பிறகு எம்ஜிஆரை வைத்து ஊமையன் கோட்டையன் என்ற திரைப்படத்தை தயாரித்தார்.

அரசியல் மோதலால் பிரிவு... டெலிபோனில் சொன்ன பாடல் : கண்ணதாசன் - எம்.ஜி.ஆர்  இணைந்தது எப்படி?

அந்தத் திரைப்படம் மூவாயிரம் அடி படமாக்கப்பட்டு பாதியிலேயே நின்று போனது. இப்படி தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை தயாரித்த கண்ணதாசன் அத்தனை ஆண்டுகள் சினிமாவில் சம்பாதித்திருந்த ஒட்டுமொத்த பணத்தையும் தயாரிப்பிலேயே இழந்து போனார். தயாரிப்புகளில் பணத்தை இழந்த காரணமே பின் நாட்களில் அவருடைய குடிப்பழக்கத்திற்கும் இறப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது