பாடல் வரிகளை தப்பாக பாடியதால் வேறொரு பாடகரை நியமித்த இசையமைப்பாளர் சி.ஆர் சுப்புராமன்.. நேருக்கு நேர் சவால் விட்ட பாடகர் சிதம்பரம் ஜெயராம்.!

By Nanthini on சித்திரை 1, 2025

Spread the love

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் 50 மற்றும் 60 காலகட்டங்களில் இருந்த இசையமைப்பாளர்கள் மற்றும் பாடல் ஆசிரியர்கள் என அனைவருமே ஒரு சம்பவத்தை சொல்லிவிட்டால் அதற்கு ஏற்றது போல கச்சிதமாக பாடல் எழுதக்கூடியதில் வல்லவர்கள். ஆனால் அன்றைய காலத்திலும் சில போட்டிகள் இருந்துள்ளது. சினிமாவில் பல சுவாரசியமான சம்பவங்களும் படப்பிடிப்புகளில் நிகழ செய்கின்றன. அதன்படி தான் கடந்த 1953 ஆம் ஆண்டு வெளியான மருமகள் திரைப்படத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. யோக நாதியக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் என்.டி ராமராவ், சகஸ்ரநாமம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் கதாநாயகியாக நாட்டிய பேரொளி பத்மினி நடித்திருந்தார்.

   

லேனா செட்டியார் கிருஷ்ணா பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்திற்கு சி ஆர் சுப்புராமன் இசை அமைத்திருந்தார். இவருடைய இசையில் சிதம்பரம் ஜெயராமனும் பி.ஏ பெரிய நாயகியும் பாடுகிற பாடல் பதிவு செய்யப்பட இருந்தது. சிதம்பரம் ஜெயராம் சின்ன சின்ன வீடு கட்டி என்ற அந்த பாடலை பாடத் தொடங்கினார். அப்போது அவர் பாடும் போது வெளியில் இருந்தவர்களுக்கு கட்சி கட்சி என்று கேட்டுள்ளது. அதனால் அவரை பலமுறை அந்த பாடலை பாட சொல்லியும் இறுதியில் அனைவருக்கும் கட்சி என்றுதான் கேட்டு உள்ளது. இதனால் அந்த பாடலை ஏ.எம். ராஜாவை வைத்து பாட வைக்கலாம் என்று முடிவு செய்தனர்.

   

 

இதில் விஷயம் என்னவென்றால் பி ஏ பெரிய நாயகியின் குரல் கம்பீரமாக இருக்கும், ஆனால் ஏ எம் ராஜாவின் குரல் மென்மையாக இருப்பதால் இருவரையும் சேர்ந்து பாட வைத்தால் எப்படி இருக்கும் என்று சி ஆர் சுப்புராமன் யோசித்துள்ளார். அதன் பிறகு ஏ எம் ராஜா பாடல் பாட வந்த சமயத்தில் இதற்கு முன்னதாக அந்த பாடலை பாடிய சிதம்பரம் ஜெயராம் இசையமைப்பாளர் சி ஆர் சுப்புராமனிடம் ஒரு நிபந்தனை விதித்துள்ளார். அதாவது இப்போது ஏ எம் ராஜா இந்த பாடலை பாடட்டும் அப்படி பாரும்போது ஸ்வரம் சுத்தமாக கட்டி என்று முடியும் அளவுக்கு அவர் பாடிவிட்டால் அவரே தொடர்ந்து பாடட்டும். அப்படி இல்லை என்றால் மீண்டும் வாய்ப்பை நீங்கள் எனக்கு தான் தர வேண்டும் என சிதம்பரம் ஜெயராம் கூறியுள்ளார். ஆனால் மாறாக ஏ.எம். ராஜா அந்த பாடலை நன்றாக பாடி விட அவர் பாடிய அந்த பாடல் தான் மருமகள் திரைப்படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன வீடு கட்டி பாடல்.