தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் நீனா. அபூர்வ சகோதரிகள் என்ற படத்தில் 2 வயது குழந்தையாக நடித்தவர். குறிப்பாக நாயகன் படத்தில் கமலின் மகளாக சிறுமியாக நடித்திருப்பார். அதே போல் கேளடி கண்மணி படத்திலும் பாடகர் எஸ்பிபி மகளாக சிறுமியாக வருவார். மேலும் கண்ணாத்தாள் விடுகதை நாகலிங்கம் சுதந்திரம் போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அவரை சினிமாவில் காண முடியவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை நீனா கூறியதாவது, 2003ம் ஆண்டில் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. 2004ம் ஆண்டில் எனக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு கடந்த 22 ஆண்டுகளாக நான் சினிமாவில் நடிக்கவில்லை. நான் ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் இருக்கிறேன். என்னுடைய முதல் படம் நாயகன் இல்லை. அபூர்வ சகோதரிகள்தான். நான் 1981ல் பிறந்தேன். 2 வயது குழந்தையாக அபூர்வ சகோதரிகள் படத்தில் நடித்திருந்தேன். அதுதான் என்னுடைய முதல் படம் என்று நடிகை நீனா கூறியிருக்கிறார்.
