Connect with us

CINEMA

அற்புதம், மஜா போன்ற படங்களில் நடித்த நடிகை அனுவை ஞாபகம் இருக்கா..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..

கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் அனு பிரபாகர். 1990 ஆம் ஆண்டு சபாலா சென்னிகரையா என்ற கன்னட திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

   

1999 ஆம் ஆண்டு ஹருதையா ஹருதையா என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே சிவக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து இவர் நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. கன்னடத்தில் மிகப் பிரபல நடிகையாக வளம் வந்த இவர் தமிழில் லாரன்ஸ் நடித்த அற்புதம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார்.

பின்னர் அன்னை காளிகாம்பாள். மஜா உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கின்றார். தமிழில் குறைந்த அளவு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கன்னட சினிமாவில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் பிரபல நடிகையாக வளம் வந்தார். பின்னர் 2002 ஆம் ஆண்டு பிரபல கன்னட நடிகையான ஜெயந்தியின் மகன் கிருஷ்ணகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

12 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர். பின்னர் 2016 ஆம் ஆண்டு ராகு முகர்ஜி என்ற கன்னட நடிகரை திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கின்றார் . திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருக்கும் அனு பிரபாகரன் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது கணவருடன் சேர்ந்து அவர் ஓட்டு போட்ட சென்று இருக்கின்றார். அப்போது எடுத்த புகைப்படத்தை அவர் வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் அற்புதம் மற்றும் மஜா படத்தில் நடித்த நடிகையா? இது என்ற ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top