Connect with us

CINEMA

163 கைவினைக் கலைஞர்கள்.. 1965 மணி நேரம்.. ஆலியா பட் அணிந்திருக்கும் புடவையின் சிறப்பம்சங்கள் பற்றி தெரியுமா..?

2024 ஆம் ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சியில் நடிகை ஆலியா பட் அணிந்திருந்த ஆடையானது உலகமே புகழ்ந்து பேசும் அளவிற்கு பிரபலமாகி இருக்கின்றது. மெட்ரோபாலின் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் இன்ஸ்டிடியூஷன் என்று நிறுவனத்திற்காக நிதி சேகரிக்க ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி மெட் காலா. ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் முதல் வாரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

   

நியூயார்க்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல நாடுகள் சார்பாக பல பிரபலங்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்தியா சார்பில் பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் அசத்தலான ஆடைகளை அணிந்து பார்வையாளர்களை கவர்ந்திருந்தார்கள். இந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா தீபிகா படுகோன் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்காத நிலையில் ஆலியா பட் கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.

அதில் அவர் அணிந்திருந்த ஆடையானது பலரையும் கவனிக்க வைத்திருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இது குறித்து நடிகை ஆலியா பட் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து பல விஷயங்களை பேசியிருந்தார்.

 

இதில் கண்ணாடி மணிகள் மற்றும் அரை விலையுயர்ந்த ரத்தின கற்களைப் பயன்படுத்தி கைகளால் எம்ராய்டரி செய்யப்பட்ட மலர்களால் இந்த புடவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புடவையானது 163 நபர்களால் 1965 மணி நேரத்தில் உருவாக்கப்பட்டது. மெட் காலா 2024 நிகழ்ச்சியில் இந்த சேலையை அணிந்து இந்திய கலாச்சார பிரதிநிதியாக நடிகை ஆலியா பட்  கலந்து கொண்டது பலரையும் பாராட்ட வைத்திருக்கின்றது. இந்த புகைப்படங்கள்தான் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top