அதுக்காக நான் அரசியலுக்கு வர வேண்டுமா? அது எனக்கு தேவையில்லே – சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் நெத்தியடியாக பேசிய கன்னட நடிகர் சிவராஜ்குமார்!

By Elango on மார்கழி 22, 2025

Spread the love

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டராக வலம் வருபவர் சிவராஜ்குமார். ரசிகர்கள் அவரை சிவாண்ணா என்றுதான் அன்பாக அழைக்கின்றனர். ஜெயிலர் படத்தில் அவரது கெஸ்ட் ரோலை தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடினர். இந்நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்றார்.

அப்போது அவரிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்கள், தமிழ்நாட்டில் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர். விஜயகாந்த் கமல்ஹாசன் சரத்குமார் இப்போது விஜய் என அரசியலுக்கு வந்துவிட்டனர். கன்னட சினிமாவில் புகழ் பெற்ற நீங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

   

அதற்கு பதிலளித்த நடிகர் சிவராஜ்குமார் கூறியதாவது, அரசியல் எனக்கு தெரியாது. அதுதான் உண்மை. அரசியலுக்கு வரவும் எனக்கு விருப்பமில்லை. அரசியல்வாதியாக மக்களுக்கு செய்ய வேண்டிய நன்மைகளை உதவிகளை இப்போதே நான் செய்துக்கொண்டு தான் இருக்கிறேன். அதுவே போதும்.

   

அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது இல்லை. அது எனக்கு தேவை இல்லை. அரசியலுக்கு வந்தால் உதவி செய்வதில் நன்மை செய்வதில் கூட பாரபட்சம் வந்துவிடும். இவர்களுக்குதான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு வந்துவிடும். ஆனால் இப்போது என் விருப்பம் போல யாருக்கு வேண்டுமானாலும் உதவிகள் செய்கிறேன். நன்மைகள் செய்கிறேன். ஏனென்றால் அது என்னுடைய சொந்த பணம். என் உழைப்பில் வந்த பணம் என்று நெத்தியடியாக பதில் அளித்தார்.