“ஏங்க, கொஞ்சம் பார்த்து போங்க”… ஒத்த வார்த்தையால் முடிந்த இளைஞரின் வாழ்க்கை… பிரியாணி கடையில் நடந்த கொடூர சம்பவம்…!

By Nanthini on மார்கழி 22, 2025

Spread the love

தேனி மாவட்டத்தில் பிரியாணி சாப்பிடும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தக் கடையில் உணவு அருந்தி கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறையில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தம பாலத்தை சேர்ந்த முருகன் என்பவர் கம்பத்தில் உள்ள பிரியாணி கடையில் உணவு அருந்தி கொண்டிருந்தார்.

அப்போது நண்பர்களுடன் கடைக்கு வந்த சிபி சூர்யா என்பவரின் கால் முருகன் என்பவர் மீது தெரியாமல் பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏங்க, பார்த்துப் போங்க என்று முருகன் கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த தகராறு கைகளப்பாக மாறிய நிலையில் சிபி சூர்யாவும் அவருடைய நண்பர்களும் கத்தியால் தாக்கியதில் முருகன் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

   

உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிபி சூர்யாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து முருகனின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.