“ஐயோ… பேப்பரை படிங்க சார்… மாணிக்கம் தாகூரை வச்சு செஞ்ச கனிமொழி சோமு… எக்ஸ் தளத்தில் அலறும் அரசியல்…!”

By Swetha on ஆவணி 9, 2026

Spread the love

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. இது குறித்துப் பேசிய திமுக எம்பி கனிமொழி என்.வி.என்.சோமு, தமிழ்நாட்டின் தொகுதி எண்ணிக்கை குறையக் கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளதாகவும், மாநில நலனுக்காக எங்கிருந்து நன்மைகள் வந்தாலும் வரவேற்போம் என்றும் தெரிவித்தார். ஆனால், இக்கூட்டத்தைப் புறக்கணித்ததன் மூலம் பாஜகவுடன் திமுக நட்பு பாராட்டுகிறதா என்ற கேள்வியும், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரின் விமர்சனங்களும் எழுந்தன.

திமுக எம்பிக்களின் இந்த புறக்கணிப்பு குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், எம்பிக்கள் கூட்டத்திற்கு திமுக ஏன் வரவில்லை என்பதற்கான உண்மை இப்போது வெளிவருகிறது என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். திமுகவின் இந்த நடவடிக்கை கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மாணிக்கம் தாகூரின் பதிவு இந்த விவாதத்தை மேலும் சூடாக்கியது.

   

மாணிக்கம் தாகூரின் விமர்சனத்திற்கு கடுமையாக பதிலளித்த கனிமொழி சோமு, திமுக கூட்டணி மூலம் எம்பியாகிவிட்டு தற்போது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதாகச் சாடினார். மேலும், சட்டமன்றத்தில் விஜய் தாள்களைப் பார்த்துப் படிக்க அறிவுறுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டி, “முதலில் கதறாமல் பேப்பரைப் படிக்கத் தொடங்குங்கள்” என மாணிக்கம் தாகூரையும் விஜய்யையும் ஒரே நேரத்தில் விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.