“யாரை பார்த்து காப்பி அடிக்கிறாங்க தெரியுமா?”… இனி ₹1000 இல்ல, ₹2000… போட்டு உடைத்த கனிமொழி… பெண்களுக்கு கனிமொழி கொடுத்த செம ஹேப்பி நியூஸ்…!!!

By Rajeshwari on சித்திரை 10, 2026

Spread the love

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முத்துசாமியை ஆதரித்து சென்னிமலை பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாகச் சாடினார். திமுகவின் தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி அடிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த அவர், “பொதுவாக நன்றாகப் படிக்கும் மாணவர்களைப் பார்த்துத்தான் மற்றவர்கள் காப்பி அடிப்பார்கள் அந்த வகையில் திமுகவின் சிறப்பான திட்டங்களைப் பார்த்து அதிமுகவினர் காப்பி அடிக்கிறார்கள்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

மேலும், எடப்பாடி பழனிசாமிக்குத் தேர்தல் பயம் வந்துவிட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி வருவதாகவும் கனிமொழி விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற மக்கள் நலத் திட்டங்களைப் பட்டியலிட்டதோடு, மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் இந்த உதவித் தொகைகள் உயர்த்தி வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

   

இந்நிலையில் நீட் தேர்வு, சிலிண்டர் விலை உயர்வு மற்றும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் போன்ற விவகாரங்களில் அதிமுக மௌனம் காப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், ஈரோடு பகுதியில் செயல்படுத்தப்பட்ட சோலார் பேருந்து நிலையம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா போன்ற வளர்ச்சிப் பணிகளைச் சுட்டிக்காட்டி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.