அப்பாவுக்கு செக் வைக்கும் கனிமொழி – அனிதா..? தென் மாவட்ட திமுகவுக்குள் வெடித்த பதவிப் போர்.. அறிவாலயத்தில் பரபரப்பு..!!

By Soundarya on ஆனி 8, 2026

Spread the love

திமுகவில் சபாநாயகர் அப்பாவுவிற்கு முக்கியப் பொறுப்புகள் வழங்குவதில், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முட்டுக்கட்டையாக இருப்பதாகத் தனியார் இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. தென் மாவட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கட்சியின் ‘துணைப் பொதுச்செயலாளர்’ பதவி வழங்க வேண்டும் என கனிமொழி தலைமைக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அந்தப் பதவிக்கு அப்பாவுவின் பெயரைத் தலைமை பரிசீலித்தபோது, அதற்கு கனிமொழி தரப்பில் முரண்பாடு தெரிவிக்கப்பட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மறுபுறம், அப்பாவுவிற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்குவதற்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. தென் மாவட்ட அரசியல் மற்றும் சமுதாய வாக்கு வங்கிகளைக் குறிவைத்து முக்கியப் பதவிகளைக் கைப்பற்றுவதில், அங்குள்ள முன்னணி நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தென் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளுக்கு இடையே பதவிகளைப் பகிர்ந்தளிப்பதில் தொடர்ந்து முரண்பாடுகளும், இழுபறிகளும் நீடித்து வருவது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.