தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா படத்தில் சூர்யா நடித்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோகிரீன் நிறுவனங்கள் இணைந்து கங்குவா படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

கங்குவா திரைப்படத்தை அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்ய பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால் அதே தேதியில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்துடன் மோத வேண்டாம் என சிறுத்தை சிவா உள்ளிட்ட படக் குழுவினர் ரஜினியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அக்டோபர் 10-ஆம் தேதி தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.

இதனால் கங்குவா படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்க திட்டமிட்டுள்ளனர். இன்று வரை படத்தின் ரீ ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் உள்ளனர். தளபதி விஜயின் கோட் படம் செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால் அந்த படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு இருக்கும். இந்த நேரத்தில் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம் என!பட குழுவினர் நினைத்திருப்பதாக தெரிகிறது. அனேகமாக தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31-ஆம் தேதி கங்குவா திரைப்படம் ரிலீஸ் ஆகும் என சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படத்தையும் தீபாவளிக்கு தான் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். கடந்த ஆண்டு விட முயற்சி படத்தின் அறிவிப்பு வெளியாகி பல்வேறு காரணங்களால் ஷூட்டிங் தாமதமானது. சமீபத்தில்தான் சூட்டிங் முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயாராக இருப்பதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதனால் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும் நேருக்கு நேர் மோதுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

