Categories: TRENDING

நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்த பெண் காவலர்.. நடந்தது என்ன..? வைரலாகும் வீடியோ..

பிரபல நடிகையான கங்கனா ரணாவத் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஹிமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பிற்பகல் 3:40 மணிக்கு கங்கனா ரணாவத் சண்டிகரில் இருந்து டெல்லிக்கு திரும்பி சென்றுள்ளார்.
அப்போது விமான நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது.

விவசாயிகளுக்கு எதிராக கங்கனா தெரிவித்த கருத்துக்களே அதற்கு காரணம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது பற்றி கங்கனா ரணாவத் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, நான் நன்றாக இருக்கிறேன். விமான நிலையத்தில் நடைபெற்ற பாதுகாப்பு சோதனையின் போது அந்த சம்பவம் நடைபெற்றது. சோதனை முடிந்த பிறகு நான் சென்றேன். அப்போது அந்த பெண் காவலர் வேறு ஒரு கேபினில் அமர்ந்திருந்தார்.

நான் அவரை கடக்கும்போது அந்தப் பெண் காவலர் என் முகத்தில் அறைந்தார். பின்பு என்னை திட்டினார். ஏன் இப்படி செய்தாய் என கேட்டேன். அதற்கு அவர் விவசாயிகளின் போராட்டத்துக்காக தான் இப்படி செய்தேன் என கூறினார். பஞ்சாபில் பயங்கரவாதம் அதிகரித்து வரும் நிலையில் இதை எப்படி கையாள்வது என்பது எனக்கு கவலை அளிக்கிறது என கங்கனா கூறியுள்ளார். அந்தப் பெண் காவலரை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Archana
Archana

Recent Posts

ஷூட்டிங் ஸ்பாட்டில் குஷ்புவின் கன்னத்தை பிடித்து பிரபு சொன்ன விஷயம்.. பிரபுவா அப்படி சொன்னாரு..? அது இன்னைக்கு வரைக்கும் மாறவே இல்ல..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

13 நிமிடங்கள் ago

உண்மைய சொல்லாம என்ன ஏமாத்திட்டீங்க… சுப்ரமணியபுரம் ஷூட்டிங்கில் சசிகுமாரிடம் அழுத ஸ்வாதி- அப்படி என்ன மறைத்தார் தெரியுமா?

2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…

1 மணி நேரம் ago

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

2 மணி நேரங்கள் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

4 மணி நேரங்கள் ago

நீச்சல் குளத்தில் இருந்த படி புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…

4 மணி நேரங்கள் ago

ஒரு போட்டோ கூட இன்ஸ்டால போட விட மாட்டாரு.. லேடிஸ்க்கு சினிமா எதுக்குன்னு திட்டுவாரு.. தந்தை KS ரவிக்குமார் குறித்து பேசிய மகள்..!

எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…

5 மணி நேரங்கள் ago