#image_title
பிரபல நடிகையான சௌகார் ஜானகி முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கதை வசனத்தில் குலக்கொழுந்து படத்தில் நடித்தார். பின்னர் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோருடன் இணைந்து திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழகத்தின் மூன்று முதல்வர்கள் உடன் கலைப்பயணத்தில் இணைந்தவர் சௌகார் ஜானகி. இவர் முன்னணி நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி, என்டிஆர், நாகேஸ்வரராவ், ராஜ்குமார் உள்ளிட்டோருடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
15 வயதில் ஆல் இந்தியா ரேடியோவில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அவரது குரலை கேட்டு தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதன்படி கடந்த 1947-ஆம் ஆண்டு ரிலீசான சௌகார் படத்தின் மூலம் ஜானகி அறிமுகமானார். நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சம்பளம் வாங்காமல் கூட நடித்துக் கொடுப்போம் என பல நடிகர்கள், நடிகைகள் கூறுவது உண்டு.
ஆனால் அதற்கு எடுத்துக்காட்டு சௌகார் ஜானகி தான். ஒரு படத்தில் நல்ல கதாபாத்திரம் வந்த போது சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். மேலும் அந்த படம் ரிலீஸ் ஆவதிலும் சிக்கல் ஏற்பட்டது அப்போது தனது கையில் இருந்த பணத்தை கொடுத்து சிக்கலை தீர்த்து வைத்தார். அது மட்டும் இல்லாமல் சௌகார் ஜானகி விஜயா ப்ரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தினார். இந்த நிறுவனங்கள் மூலம் படங்களை தயாரித்தார். பிரபல நடிகரான தேங்காய் சீனிவாசன் நடிக்கும் படத்தை சௌகார் ஜானகி தயாரித்தார்.
அந்த படத்தில் நடிப்பதற்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் என சௌகார் ஜானகி கேட்டுள்ளார். அதற்கு சீனிவாசன் பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி படத்தையும் நடித்து முடித்து கொடுத்தார். ஒருநாள் சௌகார் ஜானகி தேங்காய் சீனிவாசனிடம் சென்று சம்பளத்திற்கான வரைவோலையை கையில் கொடுத்தார். அதில் தேங்காய் சீனிவாசன் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பல மடங்கு சம்பளம் எழுதப்பட்டிருந்தது. இதனை ஒரு பத்திரிகையில் தேங்காய் சீனிவாசன் பகிர்ந்ததாக நடிகர் சித்ரா லட்சுமணன் யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
பெங்களூருவில் ராபிடோ பைக்குகளில் பயணிப்பவர்கள் பாதுகாப்புக் குறித்த அச்சம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் முக்கியப்…
விஜயாப்பூரில் காலையில் நடைபயிற்சியின் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான நபர் விபத்து மரணம் அல்ல, மாறாக திட்டமிடப்பட்ட…
ராஜஸ்தானின் டீக் மாவட்டத்தில் உள்ள ஒரு வயலில் 13 வயது இரட்டைக் குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…
6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…