இதுதான் அதிர்ஷ்டம்..! வெறும் 500 ரூபாய்க்கு கம்மல் விலை 1 லட்சமா..? வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. இணையத்தில் வைரலாகும் சீக்ரெட்…!!

By Soundarya on மாசி 13, 2026

Spread the love

சவன்னா என்ற இளம்பெண் பழைய பொருட்களை விற்கும் தொண்டு நிறுவனக் கடை ஒன்றில் (Charity Shop) சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, தங்க நிறத்திலான அழகான ‘கிளிப்-ஆன்’ ரக காதணிகள் அவளது கண்ணில் பட்டன. அதன் தனித்துவமான வடிவமைப்பால் கவரப்பட்ட சவன்னா, அது ஒரு சாதாரண ஃபேஷன் நகைத் துண்டு என்று கருதி வெறும் £3.75 (இந்திய மதிப்பில் சுமார் 500 ரூபாய்) கொடுத்து வாங்கினாள். ஆனால், வீட்டிற்கு வந்து அந்த காதணிகளை உன்னிப்பாகக் கவனித்தபோதுதான், அதன் பின்னால் உலகின் புகழ்பெற்ற சொகுசு பிராண்டான Yves Saint Laurent (YSL)-ன் லோகோ பொறிக்கப்பட்டிருப்பதை அவள் கண்டாள்.

முதலில் இதனை நம்ப முடியாமல் திகைத்த சவன்னா, இணையத்தில் தேடிப் பார்த்தபோது அவளது ஆச்சரியம் பலமடங்கு அதிகரித்தது. அதே போன்ற YSL பிராண்ட் காதணிகள் மறுவிற்பனை இணையதளங்களில் சுமார் 90,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுவதை அவள் கண்டறிந்தாள். வெறும் 500 ரூபாய்க்கு வாங்கிய பொருள், அதன் உண்மையான மதிப்பை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகம் என்பது அவளுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. பழைய பொருட்களைத் தேடி வாங்கும் ஆர்வம், சவன்னாவிற்கு எதிர்பாராத ஒரு மிகப்பெரிய லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.