சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகராவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி என்பதாகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த சிவாஜி கணேசனின் நடிப்பு திறனை பார்த்த தயாரிப்பாளர் பி.ஏ பெருமாள் முதலியார் 1952 ஆம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தினார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமான பின்பு விதவிதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடித்து தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார் சிவாஜி கணேசன். தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்துள்ளார் சிவாஜி கணேசன். மொத்தம் 288 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் இதில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் மட்டும்தான்.
நல்ல குரல் வளம் தெளிவான உணர்ச்சிப்பூர்வமான தமிழ் உச்சரிப்பு சிறந்த நடிப்பு திறன் ஆகியவை சிவாஜி கணேசன் அவர்களின் தனிச்சிறப்புகள் ஆகும். இவரை நடிகர் திலகம் நடிப்பு சக்கரவர்த்தி சிம்ம குரலோன் என்று பெரும்பாலான மக்கள் அழைத்தானர். நீண்ட வசனங்களாக இருந்தாலும் சரி அதை உள்வாங்கிக் கொண்டு அப்படியே பேசி விடுவார் சிவாஜி கணேசன்.
சரித்திரம், புராணம், குடும்பம், சமூகம் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார் சிவாஜி கணேசன். கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற கதாபாத்திரங்களிலும் அருமையாக நடித்திருப்பார். ஆனால் ஏனோ சிவாஜிகணேசனுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. ஆனால் ஒரு முறை விருது கிடைக்கும் போது அதை வாங்க விடாமல் தடுத்திருக்கிறார் கமல். அது என்ன சம்பவம் என்பதை பற்றி இனி காண்போம்.
எவ்வளவுதான் நன்றாக நடித்திருந்தாலும் சிவாஜி கணேசனுக்கு தேசிய விருது கிடைக்கவே இல்லை. ஆனால் கமலுடன் இணைந்து தேவர்மகன் திரைப்படத்தில் நடித்ததற்காக துணை நடிகருக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது. ஆனால் கமல் அவர்களோ விருது வாங்க சென்ற சிவாஜி கணேசன் அவர்களை தடுத்து நீங்கள் மிகப்பெரிய நடிகர் நீங்கள் துணை நடிகர் விருதை வாங்க கூடாது என்று தடுத்திருக்கிறார். நீங்கள் சற்று பொறுமையாக இருங்கள் ஐயா உங்களுக்கு திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பாலகே விருது நிச்சயம் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். அதன்படி கமல் கூறியபடியே சிவாஜி கணேசனுக்கு அந்த விருது கிடைத்தது.