Categories: சினிமா

5 முறை வாலியின் பாடல் வரிகளுக்கு No சொன்ன கமல்.. செம கடுப்பில் எழுதி மெகா ஹிட்டான சூப்பர் பாடல்..!

Spread the love

தமிழ் திரையுலகை பொருத்தவரையில் மறைந்த வாலிப கலைஞர் வாலி, பல மேடைகளில் பாராட்டி பேசிய வெகு சில நடிகர்களில் ஒருவர்தான் உலகநாயகன் கமல்ஹாசன். கோலிவுட் உலகில் கமல்ஹாசன் ஒருவர்தான் படத்திற்கு படம் பல வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். சினிமா உலகம் உள்ளவரை அவருக்கு அழிவு என்பதை கிடையாது என்று வாலி புகழாரம் சூட்டியுள்ளார். இளையராஜா மற்றும் கமல்ஹாசன் காம்பினேஷனில் பல மெகா ஹிட் திரைப்படங்கள் உருவாகியுள்ளன. அதில் ஏறத்தாழ 60 சதவீதம் திரைப்படங்களுக்கு பாடல் ஆசிரியராக பணியாற்றியுள்ளவர்தான் வாலி. நடிகர் கமல்ஹாசன் மற்றும் வாலி இருவரும் ஒரு பாடலை உருவாக்குவதற்கு முன்பு அதற்காக மிகப்பெரிய மெனக்கடல்களை எப்போதும் செய்வது வழக்கம்தான்.

அதனைப் போல கமலுக்கு முன்பாக கவிஞர் வாலி மிகப்பெரிய அளவில் நட்பு பாராட்டியது மறைந்த முதல்வரும் நடிகருமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் உடன். இந்த நிலையில் 1989 ஆம் ஆண்டு நடிகர் கமல் நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் பாடல்களை எழுதியதற்காகவும் தமிழக அரசு வழங்கும் மாநில விருதை வாலி பெற்றுள்ளார். பொதுவாக பாடலாசிரியர்கள் பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்க மாட்டார்கள். ஆனால் ஒரு பாடலாசிரியராக 15000 மேற்பட்ட பாடல்களை எழுதிய வாலி கடந்த 1983 ஆம் ஆண்டு தமிழில் வெளியான பொய்க்கால் குதிரை என்ற திரைப்படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்ற நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 1989 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் மூன்று வேடங்களில் நடித்த அசத்திய அபூர்வ சகோதரர்கள் என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியது வாலி தான். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கான பாடல்களை அமைக்கும்போது பல நேரங்களில் கமல்ஹாசன் வாலியை படாத பாடு படுத்தி உள்ளார். குறிப்பாக ராஜா கைய வச்சா என்ற பாடலுக்காக மிகப்பெரிய அளவில் வாலியை டார்ச்சர் செய்த கமல் அதே திரைப்படத்தில் வரும் உன்ன நெனச்சேன் பாட்டு படித்தேன் என்ற பாடலுக்காகவும் மிகப்பெரிய அளவில் அவரை பாடாய்படுத்தி எடுத்துள்ளார்.

இது முழுக்க முழுக்க காதல் தோல்வியை சொல்லும் பாடலாக இருக்க வேண்டும் என்பதால் அந்த தவறு தன்னுடையது என்பதை நாயகன் உணர்ந்தே அந்த பாடலை பாடுகிறான். இதில் யாரையும் அவன் காயப்படுத்த விரும்பவில்லை. தனது இயலாமையை நினைத்தும் அவன் வருத்தப்பட வேண்டும் என்று பல விஷயங்களை வாலியிடம் கூற அவரும் வரிகளை எழுதி தள்ளியுள்ளார். சுமார் ஐந்து முறை அவர் கொடுத்த வரிகளுக்கு கமல் No சொல்ல, ஆறாவது முறையாக கொடுத்த வரிகளை தான் கமல் ஓகே செய்தாராம். அந்த ஆறாவது வரிகளை கொடுக்கும்போது இதுதான் கடைசி இனி என்னால் எழுத முடியாது என்று கோபத்துடன் அந்த வரிகளை கொடுத்துள்ளார். அந்தப் பாடல் தான் இன்றளவும் சூப்பர் ஹிட் பாடல் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறது.

Nanthini

Recent Posts

“நான் சாகல.. உயிரோடுதான் இருக்கேன்…” பிணமாக நடித்து முதியவர் நடத்திய நூதனப் போராட்டம்… உறைய வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…

7 minutes ago

“செல்போனை பிடுங்கி சித்திரவதை…” 2 பிள்ளைகளை தவிக்க விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…

17 minutes ago

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

25 minutes ago

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

33 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

36 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

41 minutes ago