விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்க போகிறீர்களா…? உகந்த நேரம் எப்போது தெரியுமா…?

Spread the love

இந்து மதத்தில் இந்த நவராத்திரி நேரம் என்பது மிக முக்கியமாகும். இந்து மதாத்தில் இருக்கும் அனைத்து பெண் தெய்வங்களையும் முன்னிலைப்படுத்தி வழிபாடு செய்து கொண்டாடப்படுவது இந்த நவராத்திரி காலமாகும். அரக்கனை அழிக்க பார்வதிதேவி ஒன்பது நாள் விரதம் இருந்து பத்தாவது நாள் அரக்கனை அழித்ததாகவும் புராணக்கதை கூறுகிறது.

இந்த நவராத்திரியின் முடிவில் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை விஜயதசமி ஆகியவை கொண்டாடப்படுகிறது. கல்வியும் ஞானத்தையும் வழங்கக்கூடிய தெய்வமான சரஸ்வதி தேவியை வழிபாடு செய்து அவள் முன்பு புத்தகங்களும் பேனாக்கள் போன்றவைகளை வைத்து பூஜிக்கப்படுகிறது. அன்றைய தினம் ஆயுத பூஜை அன்று நமக்கு சோறு போடும் தொழிலை தெய்வமாக நினைத்து வணங்குவதும் ஆயுதங்களுக்கு பூஜை செய்து மரியாதையும் செலுத்தப்படுகிறது.

இந்த சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை நாளுக்கு அடுத்த நாள் வருவது தான் விஜயதசமி. விஜயதசமி என்பது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உகந்த நாளாக கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் எல்லா பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த விஜயதசமி நாளை பார்வதி தேவி எப்படி அரக்கனை அழித்து புதிய ஒரு சகாப்தத்தை உருவாக்கினாரோ அதேபோல கெட்டதை அழித்து நல்லவை தோன்றும் நாளாக இது பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் போது அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்று நம்பப்படுகிறது.

எல்லா பள்ளியிலும் விஜயதசமி அன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு குழந்தைகளை நெல்மணியிலும் அரிசியிலும் முதல் எழுத்தான வை எழுத செய்வார்கள். அதற்கு அடுத்ததாக மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த வருடம் அக்டோபர் 12ஆம் தேதி நிகழவிருக்கும் விஜயதசமி அன்று மாணவர்களை சேர்க்க உகந்த நேரமாக கருதப்படுவது காலை 10:30 மணியிலிருந்து 12 மணிக்குள் ஆகும். இந்த நேரத்தில் உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

admin

Recent Posts

டிரம்ப் கொடுத்த அதிர்ச்சி அறிவிப்பு.. சில மணி நேரங்களில் ஈரான் செய்த காரியம்…. நடுக்கடலில் சிக்கிய இந்தியக் கப்பல்… உலகையே உலுக்கும் போர் பதற்றம்….!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…

5 minutes ago

மேடையிலேயே கதறி அழுத ஜெனிலியா… கணவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கலங்கிப்போன ரசிகர்கள்…!

சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…

10 minutes ago

உதயநிதி கோட்டையில் அதிர்ச்சி… “புர்கா அணிந்து கள்ள ஓட்டா?” – திமுக மீது தவெக வேட்பாளர் வைத்த அதிரடி புகார்..!

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…

13 minutes ago

நிமிஷத்தில் மாறிய காட்சி… “ஈரான் காலி!” – டிரம்ப் வெளியிட்ட அதிரடி பதிவு… அடுத்த நொடியே பதறிப்போன உலக நாடுகள்…!

மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…

18 minutes ago

“அம்மா எப்போ வருவாங்க?” – 4 வயது மகள் கேட்ட கேள்வி.. குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையில் தாய்க்கு நேர்ந்த சோகம்…!

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பிரியதர்ஷினி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு…

24 minutes ago

கடலில் நடுவே நடந்த பயங்கரம்… இந்தியா வந்த கப்பல் மீது ஈரான் தாக்குதல்… நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்கள்…. அடுத்த பரபரப்பு…!

ஓமன் வளைகுடாவில் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதல், சர்வதேச…

29 minutes ago