Categories: சினிமா

கமல் படத்திற்கு கராராக பேசிய நடிகர் பொன்னம்பலம்.. கடைசியில் நாமம் போட்ட தயாரிப்பாளர்.. வட போச்சே..!!

Spread the love

90’s காலகட்டத்தில் பிரபல வில்லனாக வலம் வந்தவர் பொன்னம்பலம். இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். நாட்டாமை படத்தில் பொன்னம்பலத்தின் நடிப்பை யாராலும் மறக்க முடியாது. முதலில் அவர் சண்டை கலைஞராகத்தான் இருந்தார்.

ஆனால் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் மூலம் முழு நேர நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன், பெரிய மருது, நாட்டாமை, மாநகர காவல் என ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தார். கடந்த 1990-ஆம் ஆண்டு மைக்கேல் மதன காமராஜன் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சீனிவாச ராவ் இயக்கினார்.

சமீபத்தில் பொன்னம்பலம் அளித்த பேட்டியில் கூறியதாவது, மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் அணுகினார். நான் சண்டை காட்சிகள் இல்லாமல் படத்தில் நடித்தால் 200, 300 தான் சம்பளம் தருவார்கள். நல்ல சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன் எனக் கூறினேன். அதைப் பற்றி தயாரிப்பாளரிடம் பேசிக்கொள் என இயக்குனர் கூறிவிட்டார். நானும் தயாரிப்பாளரிடம் சென்று கராராக ஒரு நாளைக்கு 2000 வீதம் கொடுத்தால் தான் நடிப்பேன் என பேசினேன்.

அதனை கேட்டதும் தயாரிப்பாளர் பெருமூச்சு விட்டு நல்லவேளை நீ 5000 ரூபாய் கேட்பாய் என நினைத்தேன் என கூறினார். நான் போட்ட கணக்கை விட அவர்கள் அதிகமாக தான் நினைத்து வைத்திருந்தார்கள். நான்தான் 2000 என முதலிலேயே கூறிவிட்டேன். நான் கூறியதால் பத்து நாளைக்கு 20000 என்ற கணக்கில் என்னிடம் பணத்தை தயாரிப்பாளர் கொடுத்தார். அப்படி இல்லை என்றால் அந்த படத்தில் நடிக்க ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பேன் என கூறியுள்ளார்.

admin

Recent Posts

BIG BREAKING: பதவியேற்பு விழா ரத்து… விஜய்க்கு காலையிலேயே அடுத்த ஷாக்…. அவசர ஆலோசனை…!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதில் நிலவும் இழுபறி காரணமாக, சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறவிருந்த பதவியேற்பு விழா அதிரடியாக…

3 minutes ago

“எங்களை ஏமாத்திட்டாங்க, யார் அந்த கறுப்பு ஆடு?”… துர்கா ஸ்டாலின் கையில் எடுத்த ‘லிஸ்ட்’: தூக்கப்படப் போகும் முக்கிய தலைகள்… அடுத்த பரபரப்பு…!

திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்த எதிர்பாராத தோல்வி தமிழக அரசியல்…

6 minutes ago

அடுத்த அதிர்ச்சி… விஜய்யின் பதவி ஏற்பு விழா திடீர் ரத்து… பின்னால் இருக்கும் அதிர்ச்சி தரும் காரணம்… பரபரக்கும் அரசியல் களம்…!

சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.…

8 minutes ago

“இப்போ விஜய் முதல்வர் தான் ஆனா?”… 6 மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் தேர்தல்… ஆனந்த் சீனிவாசன் வீசிய அரசியல் குண்டு…!

தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவுத் தலைவர் ஆனந்த்…

11 minutes ago

சம்பாதித்தது போதும், இனி வாழ வேண்டும்..! 11 வருட உழைப்பிற்குப் பின் இளைஞர் எடுத்த அதிரடி முடிவு…!

35 வயதான ஒரு நபர், தனது 11 ஆண்டுகால கார்ப்பரேட் வாழ்க்கையைத் துறந்து, வாழ்க்கைத் தேர்வுகளை மறுபரிசீலனை செய்துள்ளார். பல…

15 minutes ago

‘திருமாவளவனுக்கு முதல்வர் பதவி’… யாரும் எதிர்பாராத திருப்பம்… காலையிலேயே பரபரப்பு…!

தமிழக அரசியலில் தற்போதைய பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் தனது முகநூல் பதிவின் மூலம்…

16 minutes ago