Categories: சினிமா

அடிச்சதுப்பா ஜாக்பாட்..! சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் காத்துகருப்பு கலை.. அதுவும் 100 கோடி வசூல் செய்த ஹீரோ படத்துல..!

Spread the love

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே இயக்குனரும் நடிகருமான பிரதிப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐசி திரைப்படத்தில் காத்து கருப்பு கலை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் கோமாளி திரைப்படத்தை இயக்கி தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர் இயக்குனர் பிரதிப் ரங்கநாதன். அதை தொடர்ந்து லவ் டுடே என்ற திரைப்படத்தில் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் களமிறங்கிய இவருக்கு அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவுக்கு ஹிட் கொடுத்தது.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்துவரும் பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அதை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் என்கின்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்ஐசி திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு  ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்கின்றார். மேலும் எஸ் ஜே சூர்யா, யோகி பாபு இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகின்றது.  லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்கின்ற காதல் நகைச்சுவை திரைப்படம் எடுக்கப்பட்டு வருகின்றது.

இப்படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் இந்த திரைப்படத்தை லலித் குமார் தயாரிக்கின்றார். இந்நிலையில் மற்றொரு அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கின்றது. இந்த திரைப்படத்தில் யூடியூபில் பிரபலமான காத்து கருப்பு கலை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. யூட்யூபில் பல சர்ச்சையான வீடியோக்களை வெளியிடுவது, சம்பந்தமே இல்லாமல் பேசிட்டு ட்ரெண்ட்டானவர் தான் காத்து கருப்பு கலை. இவர் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கின்றது.

Mahalakshmi

Recent Posts

“இத்தனை நாளா இது தெரியாம போச்சே!… டாய்லெட் கறையை விரட்ட ‘அந்த’ ஒரு பொருள் போதும்!… ரசாயன வாசனை இல்லாத மேஜிக் கிளீனர்… இல்லத்தரசிகளுக்கான சூப்பர் டிப்ஸ்”…!!!

வீடுகளில் கழிவறையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் கடுமையான ரசாயனங்களுக்குப் பதிலாக, பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலவை ஒரு சிறந்த…

10 minutes ago

“2017 கூவத்தூர் டூ 2026 பூரணாங்குப்பம்”… விஜய்க்கு 10 சீட்.. சி.வி.சண்முகத்திற்கு டெப்யூட்டி சிஎம்?.. நள்ளிரவில் கசிந்த ரகசிய டீல்..!

தமிழக அரசியலில் 2017-ம் ஆண்டு அரங்கேறிய கூவத்தூர் அதிரடிச் சம்பவங்கள், சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது புதுச்சேரி பூரணாங்குப்பம்…

20 minutes ago

“சொன்னதைச் செய்யும் கேது பகவான்… இந்த டாப் 3 ராசிகளுக்கு அடித்தது மெகா ஜாக்பாட்… இனி ராஜயோகம் தான்.. இதில் உங்க ராசி இருக்கானு பாருங்க”…!!!

2026-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சி, ஜோதிட ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி,…

20 minutes ago

அதிர்ச்சி! விஜய்க்கு கான்வாய் வாகன பாதுகாப்பு திடீர் வாபஸ்.. நீலாங்கரை இல்லத்தில் பேரிகார்டுகள் அகற்றம்.. பின்னணி என்ன..?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு கடந்த மூன்று நாட்களாக வழங்கப்பட்டு வந்த கான்வாய் வாகனங்கள் (பாதுகாப்பு வாகனங்கள்) திரும்பப்…

26 minutes ago

“சண்டைக்காரன் காலில் விழுந்த ஸ்டாலின்?”… எடப்பாடி எடுத்த அந்த ஒரு முடிவு… விஜய்யை வீழ்த்த இப்படி ஒரு திட்டமா?…. கசிந்த திடுக்கிடும் தகவல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், அரை நூற்றாண்டு கால அரசியலை தலைகீழாக மாற்றியுள்ளன. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108…

26 minutes ago

“நீங்க தாராளமா ஆட்சி அமைக்கலாம், ஆனா”… ஸ்டாலின் போட்ட 2 கண்டிஷன்…. ஆடிப்போன விஜய்…. பரபரக்கும் அறிக்கை….!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அக்கட்சியின்…

33 minutes ago