சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் அதற்கு இல்லை. காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்ற போதிலும், பெரும்பான்மைக்கு இன்னும் 5 இடங்கள் குறைவாக உள்ளது. இதனால், பெரும்பான்மையை நிரூபித்த பிறகு பதவியேற்கலாம் என ஆளுநர் அறிவுறுத்தியதால், இன்று நடைபெறவிருந்த பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
விஜய் தரப்பு விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை நாடியுள்ள நிலையில், அங்கிருந்து இதுவரை முறையான பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையே, தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதே மரபு என அரசியல் விமர்சகர்கள் கூறினாலும், பொறுப்பு ஆளுநர் அர்லேகர் “பெரும்பான்மையை என்னிடம் நிரூபித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பேன்” என உறுதியாகத் தெரிவித்துள்ளார். இது விஜய்க்கு அளிக்கப்படும் மறைமுக அரசியல் அழுத்தம் என தவெகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மே 8-ஆம் தேதி ராசி இல்லாத எண் என்றும், மே 9 முதல் 12 வரை அஷ்டமி, நவமி மற்றும் செவ்வாய்க்கிழமை போன்ற காரணங்களால் பதவியேற்பு நிகழ்வு நடைபெற வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, முகூர்த்த நாளான மே 13-ஆம் தேதி (புதன்கிழமை) விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்குள் தேவையான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் திரட்ட தவெக தீவிரமாக முயன்று வருகிறது.
அமெரிக்க செனட் சபை, ரஷ்யாவையும் அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கொள்முதல் செய்யும் நாடுகளையும் குறிவைக்கும் புதிய தடைகள் சட்ட…
அரசு மருத்துவமனை ஒன்றிற்குப் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணிப் பெண்ணை, அங்குள்ள மருத்துவர்கள் மிகவும் ஆபாசமாகவும் இழிவாகவும் பேசிய சம்பவம் பெரும்…
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாலாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மல்லேஷ் தேபேகர், தான் அறுவடை செய்த கொண்டைக்கடலையை வீட்டில் உள்ள…
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பகலகுண்டே பகுதிக்கு உட்பட்ட ஹவாநூர் லே-அவுட்டில் உள்ள ஒரு மாடி வீட்டில், தாட்சாயிணி (52) என்ற…
ராமநாதபுரம் மாவட்டத்தில் கமிஷன் ஆசைக்காக வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டு, ஆன்லைன் மோசடி பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்பிய…
நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம் பெற்ற ரூ.2 கோடி கடனைத் திருப்பிச் செலுத்த வழங்கிய…