Categories: சினிமா

பார்க்க ஹீரோ போல் இருக்கும் நடிகை சிம்ரனின் கணவரை பார்த்து உள்ளீர்களா..? வைரலாகும் புகைப்படம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ் களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை சிம்ரனின் கணவர் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் இடுப்பழகி என்ற பட்டத்துடன் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வளம் வந்தவர்தான் நடிகை சிம்ரன். தமிழில் எத்தனையோ நடிகைகள் வந்து சென்றாலும் மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்தவர் சிம்ரன். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் கொடி கட்டி பறந்தார். சிம்ரன் என்றால் நம் நினைவுக்கு முதலில் வருவது அவரது நடனம் தான்.

சிம்ரன் 1997 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் அப்பாஸ் நடிப்பில் வெளிவந்த விஐபி என்ற திரைப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல்வேறு நடிகருடன் ஜோடி போட்டு நடித்தார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்ட நடிகை சிம்ரன்.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவரின் நடிப்புக்கு ஏராளமான விருதுகளும் கிடைத்து இருக்கின்றது. இவர் கடந்து 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இரண்டு ஆண் குழந்தைகளை பெற்ற இவர் கொஞ்ச நாட்கள் குழந்தை குடும்பம் என்று செட்டில் ஆகி நடிக்காமல் இருந்து வந்தார்.

பின்னர் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களின் நடுவராக பங்கு பெற்று வந்த இவர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் தனது இளமையான தோற்றத்தில் பார்ப்பதற்கு பழைய சிம்ரன் போல் இருந்தார். அதைத்தொடர்ந்து சீமராஜா திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த இவர் தொடர்ந்து சீயான் விக்ரம் உடன் மகான் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார் .

நடிகை சிம்ரன் பெரும்பாலும் தனது குடும்பத்தினரின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதில்லை. தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மட்டுமே அவ்வபோது வெளியிட்டு வருவார்.  தற்போது தனது கணவரின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் சிம்ரன் கணவரா இது என கேட்டு வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

“அண்ணே… 16 வருசமா உன்னை எங்கெங்கோ தேடுனேன்…” ராக்கி கட்டச் சென்ற தங்கைக்கு… சாலையோரத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

ரக்ஷா பந்தன் திருநாளன்று, ஒரு பெண் தன் உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக மிகுந்த உற்சாகத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தாள். வழியில்…

11 minutes ago

2029-ல் விஜய்க்கு பிரதமர் நாற்காலியா?…. உண்மையைப் போட்டு உடைத்த காங்கிரஸ் எம்பி… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக அரசியலில் சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் எதிர்கால பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.…

13 minutes ago

ஐயோ பாவம்… அண்ணனுக்கு ராக்கி கயிறு கட்ட வந்த தங்கச்சி… கார் மோதி பரிதாப பலி… ரக்ஷா பந்தன் இரவில் நேர்ந்த கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக லலித்பூரிலிருந்து குஷிபுராவில் உள்ள தனது தாய்வழி வீட்டிற்கு 24 வயதான பாலக் வந்துசேர்ந்தார். திங்கட்கிழமை…

14 minutes ago

‘அப்பாவைக் காணோம்’…. சட்டமன்ற பதிலடிக்கு சேலத்தில் வைத்து விஜய்க்கு விடுக்கப்பட்ட ‘ரீல்ஸ்’ சவால்… விஜய்யை கலாய்க்க போய் திமுக சிக்கிய ஆப்பு….!

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் விஜய்யின் தவெக வருகையும் அவர் எழுப்பும் கேள்விகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.…

17 minutes ago

“நிதி உதவி தர்றோம்”…. முதல்வர் விஜய் பெயரில் பரவும் வாட்ஸ்அப் மெசேஜ்… நம்பினால் பேராபத்து…. தமிழக மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை….!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசுவது போல ஏஐ (AI) மற்றும் டீப் ஃபேக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள்…

23 minutes ago

ஐயோ கடவுளே… கைலாச மானசரோவர் யாத்திரை சென்ற… ஹைதராபாத் குடும்பம் வெள்ளப்பெருக்கில் மாயம்… 5 நாட்களாகத் தொடரும் அதிர்ச்சி…!!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கைலாச மானசரோவர் யாத்திரை சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் அவாரி, அவரது மனைவி…

25 minutes ago