கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு கௌதம் கார்த்திக் நடித்த ரங்கூன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இது தவிர பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைரக்டராகவும் ராஜ்குமார் பெரியசாமி பணியாற்றியுள்ளார். அப்போது கமல்ஹாசன் உடன் கிடைத்த நட்புக்கு பரிசாக கிடைத்தது தான் அமரன் திரைப்பட வாய்ப்பு. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான். இவர் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ள நிலையில் ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியானது.
இதில் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். தீவிரவாதிகள் உடனான மோதலில் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த இராணுவ மேஜரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்ததால் அமரன் திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 6 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ரூ. 6.6 கோடி ரூபாய் வசூலைப் பெற்று இதுவரை மொத்தமாக ரூ. 83.25 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
இந்திய அளவில் பார்க்கும் போது படம் 6 நாட்களில் 102.07 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. மேலும், உலகளவில் 150 கோடியைக் கடந்து 155 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. இந்த நிலையில் அமரன் முழு வெற்றிக்கு காரணமே கமல்தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கமல்ஹாசன் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்ததும் படத்தை போட்டு பார்த்துள்ளார். அதிலிருந்த தவறுகளை ஒரு பேப்பர் எடுத்து எழுதியுள்ளார். பிறகு மொத்த பட குழுவையும் அழைத்து அரை நாள் முழுவதும் கிளாஸ் எடுத்துள்ளார்.
படத்துல இதெல்லாம் மாற்ற வேண்டி இருக்கு இந்தாங்க போய் இதெல்லாம் மாத்திட்டு திரும்ப எடுத்துட்டு வாங்க என்று கூறியுள்ளார். அவர் சொன்ன தவறுகளை எல்லாம் திருத்திய பிறகு தான் அமரன் திரைப்படம் ஒரு முழு வெற்றி பெற்றுள்ளது. இதனால் அமரன் முழு வெற்றிக்கு காரணமே கமல்தான் எனக் கூறப்படுகிறது. இப்படியான நிலையில் இந்தியன் 3 படத்திலும் கமல் சொல்வதை அப்படியே நாம் கேட்டுக் கொள்வோம் என்று லைகா நிறுவனமும் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் அமரன் திரைப்படம் 100 கோடியை எட்டி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…