‘கமல் வீடுதேடி வந்து பொண்ணுக்கேட்டது உண்மை.. நாங்க அவள அமெரிக்கா அனுப்பிட்டோம்’.. பல உண்மைகளை அவிழ்த்த ஸ்ரீவித்யாவின் அண்ணி..

By Sumathi

Updated on:

தமிழ் சினிமாவில், 1970களில் நடிகர் கமல்ஹாசன் உணர்ச்சிகள், சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள் படங்களில் நடித்த போது சக நடிகையாக ஸ்ரீவித்யா இருந்திருக்கிறார். இருவரும் ஒன்றாக படங்களில் நடிக்கும்போது ஏற்பட்ட பழக்கமும், நட்பும் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. ஸ்ரீவித்யாவின் அண்ணன் சங்கர், கமல்ஹாசனுக்கு மிக நெருக்கமான நண்பராகவும் இருந்திருக்கிறார். எனவே, அவரது அம்மாவிடம் சொல்லி ஸ்ரீவித்யாவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி சங்கரிடம் கேட்டிருக்கிறார் கமல்ஹாசன்.

   

சங்கரின் ஆலோசனைப்படி ஒருமுறை ஸ்ரீவித்யாவின் வீட்டுக்கே நேரில் சென்று, அவரது அம்மாவை சந்தித்து தனது விருப்பம் பற்றி கூறியிருக்கிறார் கமல்ஹாசன். ஆனால், இருவருமே இப்போதுதான் சினிமா பீல்டில் வளரும் காலகட்டத்தில் இருக்கிறீர்கள். இதனால் உங்களுக்கு எதிர்கால வாழ்க்கை, வளர்ச்சி பாதிக்கும். இருவரில் யாராவது ஒருவர் நல்ல நிலைக்கு சென்றால், அது ஈகோ பிரச்னையாக மாறி, உங்கள் மண வாழ்க்கையை பாதிக்க கூடும். இதை எல்லாம் விட ஸ்ரீவித்யா, உங்களை விட ஒரு வயது மூத்தவர். அப்படியிருக்கும்போது இந்த திருமணம் நடப்பது நன்றாக இருக்காது என்று கூறி, கமல் பலமுறை வற்புறுத்தியும் தீர்க்கமாக முடியவே முடியாது என அவர்கள் திருமணத்துக்கு மறுத்துவிட்டார் ஸ்ரீவி்த்யாவின் அம்மா.

இதுகுறித்து ஸ்ரீவித்யாவின் அண்ணன் சங்கரின் மனைவி விஜயலட்சுமி, சமீபத்திய ஒரு நேர்காணலில் கூறியதாவது, என் கணவர் சங்கரும், கமலும் மிக நெருங்கிய நண்பர்கள். ஸ்ரீவித்யாவை தனக்கு திருமணம் செய்து தரும்படி அம்மாவிடம் கேள் என்று பலமுறை கமல் கேட்டுள்ளார். அதற்காக சங்கரும் அம்மாவிடம் பலமுறை கேட்டும் அம்மா சம்மதிக்கவில்லை. ஆனால் ஜெமினி, சாவித்திரி போல கமலும், ஸ்ரீவித்யாவும் சினிமாவில் வருவார்கள். அவர்கள் திருமணத்தில் எனக்கு எதுவும் தப்பாக தெரியவில்லை என்று என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார்.

ஆனால் என் மாமியார் கடைசி வரை அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. ஆனால் கமல் சமீபத்தில் கூட ஒரு பேட்டியில், ஸ்ரீவித்யா என் காதலி என்று கூறியிருக்கிறார். இவ்வளவு பெரிய புகழில் இருந்தும் பழைய காதலை அவர் மறக்கவில்லை. என் கணவர் இறந்தது அவருக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சமீபத்தில் இந்தியன் 2 படத்தில் நான் நடித்த போது, என் கையை பிடித்துக்கொண்டு எனது கணவர் சங்கர் குறித்து வருத்தப்பட்டு பேசினார். என் கணவர் சங்கருக்கு, ஸ்ரீவித்யாவை கமலுக்கு திருமணம் செய்து வைப்பதில் எந்த வருத்தமும் இல்லை. அதில் தப்பாக எதுவும் தெரியவில்லையே என்று தான் கடைசி வரை கூறினார். ஆனால், என் மாமியார்தான் அதை ஏற்கவில்லை, என்று கூறியிருக்கிறார் விஜயலட்சுமி.

author avatar
Sumathi