பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசை அமைத்தார். படத்தில் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதுபோல கமல்ஹாசனின் நடிப்பும் குறையில்லாமல் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் படத்தின் திரைக்கதை கொஞ்சம் சரியில்லாததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவான இந்தியன் படத்தின் பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் இப்போது அனிருத் திசையில் இந்தியன் 2-வில் உருவான பாடல்கள் அந்த அளவு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. படம் ரிலீஸ் ஆன நாள் முதல் அடுத்தடுத்த நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் பட குழுவினர் முதலில் 30 நிமிட காட்சிகளை நீக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

அதன் பிறகும் சரியான வரவேற்பு கிடைக்காததால் மேலும் 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை. இதனால் கமல் கடுமையாக அப்செட் ஆனாராம். இதனால் இந்தியன் 3 படத்திற்கு இந்த நிலைமை வந்து விடக்கூடாது என திடீரென ஒரு முடிவை எடுத்துள்ளார். இந்தியன் 3 படத்தை ஏற்கனவே எடுத்து முடித்து விட்டனர்.

ஆனால் அதில் இரண்டு பாடல் காட்சிகளை மட்டும் எடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால் கமல்ஹாசன் டாக்கி போர்ஷனை இன்னும் 25 நாட்கள் எடுக்க வேண்டும். அந்த ஷூட்டிங்கை கண்டிப்பாக முடிக்க வேண்டும் என கரராக கூறிவிட்டாராம். அப்படி இல்லை என்றால் இதன் பிறகு இந்தியன் திரைப்பட சூட்டிங் கமல்ஹாசன் கலந்து கொள்ள மாட்டார் என கூறப்படுகிறது. படக்குழுவினர் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

