ஹிப் ஹாப் ஆதி தானே இயக்கி தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் வெளியாகியிருக்கின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக இருந்து வரும் இவர் சுந்தர் சி இயக்கிய ஆம்பள என்ற திரைப்படத்தின் மூலமாக தனது இசை பயணத்தை தொடங்கினார். அதற்கு முன்பு பல ஆல்பம் பாடல்களை இசையமைத்து இளம் தலைமுறைகளிடையே மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்-ஆக இருந்து வந்தார்.
மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து சற்று வித்தியாசமாக தெரிந்த இவர் ஹிப் ஹாப் முறையில் பாடல்களை இசையமைத்து வந்தார். இவரின் பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. இதையடுத்து மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தை இயக்கி அவரே ஹீரோவாகவும் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் .
முதல் இரண்டு திரைப்படங்களும் நட்பை மையமாகக் கொண்டு இயக்கப்பட்டது. நடிப்பு ஒரு புறம் இருக்க இசை ஒரு புறம் இயக்கம் என்று கலக்கி வரும் இவர் தெலுங்கிலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். இவர் ஹீரோவாக நடித்த நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பு கொடுத்தது.
அதைத்தொடர்ந்து கடைசியாக PT சார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் சுமாரான வரவேற்பு கொடுத்திருந்தது. மேலும் அரண்மனை 4 திரைப்படத்திற்கு இவர் இசையமைத்திருந்த நிலையில் அந்த படத்திற்கு இவரின் பாடல் மிகப்பெரிய உதவியாக இருந்ததாக பலரும் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் ஹிப் ஹாப் ஆதி புதிய திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கின்றார். அந்த படத்தை இவரே இயக்கி தயாரித்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அப்படத்தின் போஸ்டர் உடன் டைட்டில் வெளியாகி இருக்கின்றது. இப்படத்திற்கு கடைசி உலகப் போர் என்று பேரிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையதில் வெளியாகி வைரலாகி வருகின்றது.