இந்த விஷயத்துக்காக தான் கமல்ஹாசன் AI படிக்க போறாராம்… பக்காவாக பிளான் போடும் ஆண்டவர்…!!

By admin on ஐப்பசி 16, 2024

Spread the love

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த 1960-ஆம் ஆண்டு ரிலீசான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தமிழ் சினிமாவிற்குள் கமலஹாசன் தனது பயணத்தை ஆரம்பித்து 64 ஆண்டுகள் ஆகிவிட்டது. கமல்ஹாசன் மக்கள் நீதி மையத்தின் தலைவராக உள்ளார்.

   

தமிழ் சினிமாவில் ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தால் அதை அறிமுகப்படுத்திய பெருமை கமல்ஹாசனை தான் சாரும். ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் ஃபிலிம் பயன்படுத்தி தான் படங்களை எடுத்தனர். அதனை கமல்ஹாசன் டிஜிட்டல் ஆக மாற்றினார். அவர் சினிமாவில் பல சாதனைகளுக்கு முன்னோடியாக இருந்துள்ளார்.

   

 

இப்போது இருக்கும் காலகட்டத்தில் AI தொழில்நுட்பம் அனைவரையும் கவர்கிறது. அந்த தொழில்நுட்பத்தை படிப்பதற்காக கமலஹாசன் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். மருதநாயகம் படத்தை தொழில்நுட்பம் மூலம் எடுக்கத்தான் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருப்பதாகவும் ஒரு சிலர் சந்தேகப்பட்டனர்.

உண்மையில் அவர் AI தொழில்நுட்பத்தை மருதநாயகம் படத்திற்காக படிக்க வில்லையாம். கமல்ஹாசன் போடும் திட்டம் என்னவென்றால் அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு பல புதிய திட்டங்களை கொண்டு வருவதற்காக AI தொழ்நுட்பத்தை படிக்கப் போகிறாராம். மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தோடு கமல்ஹாசன் AI தொழில் நுட்பத்தை படிக்க சென்றிருப்பதாக வலைப்பேச்சு யூடியூப் சேனலில் கூறியுள்ளனர்.