தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் திறமையை மெருகேற்றிக்கொண்டே சென்று தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.

அம்மா அப்பா இருவருமே சினிமா பின்புலத்தை கொண்டவர்கள் என்பதால் இவர் குழந்தையாக இருக்கும்போதே நடிக்க தொடங்கியுள்ளார். பிறகு படிப்பை முடித்து மலையாள சினிமாவில் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

தொடர்ந்து விக்ரம் பிரபு உடன் இணைந்து இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் கைகோர்த்த கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், விஜய் மற்றும் ரஜினி உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்த தன்னை சினிமாவில் முக்கிய நடிகையாக முத்திரை பதித்து கொண்டார்.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மற்றும் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக உள்ளார். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதியில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார்.

இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர் இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். தற்போது அவர் சேலையில் கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

