இந்தியன் 2 திரைப்படம்.. தாத்தா மிரட்டினாரா இல்ல சொதப்பினாரா..? ட்விட்டர் விமர்சனம் இதோ ..!

By Mahalakshmi on ஜூலை 12, 2024

Spread the love

இந்தியன் 2 திரைப்படம் இன்று வெளியான நிலையில் அதன் ட்விட்டர் விமர்சனம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன் 2. இன்று உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. ஊழல், லஞ்சமே பிடிக்காத சேனாதிபதியாக இந்தியன் தாத்தாவாக இருக்கும் கமலஹாசனை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பலரும் திரையரங்குக்கு படையெடுத்து வருகிறார்கள். படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் படம் குறித்து தன்னுடைய எக்ஸ் தல பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் .

   

   

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இந்தியன். இந்த திரைப்படத்தில் கமலஹாசன் டூயல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவருடன் சுகன்யா, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். படத்தின் இரண்டாவது பாகம் 28 ஆண்டுகள் கழித்து வெளியாகி இருக்கின்றது. 3 வருட போராட்டத்திற்கு பிறகு இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கின்றது.

 

மேலும் இப்படத்தில் கமலஹாசன், பாபி சிம்ஹா, சித்தார்த், எஸ் ஜே சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கின்றார். இந்நிலையில் இப்படம் குறித்து twitter விமர்சனத்தில் ரசிகர்கள் தெரிவித்து இருந்ததாவது “வின்டேஜ் சங்கர் திரும்பி வந்துவிட்டார். இயக்கம் அருமையாக இருந்தது. எடிட்டிங் இல் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

சங்கரின் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று. முதல் 20 நிமிடம் கமலை பார்க்க முடியவில்லை. பில்டப் பலமாக இருந்தது. எப்போதும் போல ஆண்டவரின் நடிப்பு வேற லெவல். சித்தார்த்தின் நடிப்பை இப்படத்தில் பாராட்டியே ஆக வேண்டும். அனிருத் இசை ஓகே. சங்கர் கூறியது போல படம் முழுக்க கமலஹாசன் வருகிறார். ஆண்டவருக்கு ஒரு ஹிட் பார்சல்.

படத்தின் இறுதியில் வரும் இந்தியன் 3 ட்ரெய்லர் மிரட்டலாக உள்ளது. இந்தியன் 3 மீது பலரின் கண்கள் இருக்கின்றது. கமலஹாசன் சொன்னது அப்போ புரியல இப்ப புரியுது என்று பலரும் கூறி வருகிறார்கள். முதல் பாதி விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும் இரண்டாவது பாதி மிக சிறப்பாக கை கொடுத்திருக்கின்றது. இந்தியன் தாத்தா சண்டை போடுவதை பார்ப்பதற்கே மிக பிரம்மாண்டமாக இருந்தது. ஆண்டவரை இப்படி பார்த்து எத்தனை காலம் ஆகிவிட்டது. சங்கருக்கு மிகப்பெரிய நன்றி” என ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.