தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அவருக்கென வெறித்தனமான லட்சக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் படம் ரிலீஸ் ஆகும் நாட்களில் தியேட்டர்கள் திருவிழா கோலம் கொள்கின்றன.
இப்படி வெறித்தனமான ரசிகர்கள் இருந்தும் அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடைய ஆயிரக் கணக்கான ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். இதற்கு அவர் சொன்ன காரணம் ரசிகர்கள் தங்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். தேவையில்லாமல் என் பெயரில் அவர்கள் நேரத்தை வீணடிக்கவேண்டியதில்லை. குடும்பத்தைக் கவனித்துக் கொண்ட பிறகு நேரம் கிடைத்தால் படத்தைப் பார்த்து ரசிக்கட்டும் என்றார்.
கடந்த சில ஆண்டுகளாக அஜித் பொது நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுங்கி தனிமை விரும்பியாக வாழ்ந்து வருகிறார். படங்களில் நடிப்பதோடு சரி, அது சம்மந்தமான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொள்வதில்லை. ஆனால் அதற்கு முன்பாக ஊடகங்களோடு நெருக்கமான தொடர்பில் இருந்தவர்தான், அஜித். ஆனால் அதனாலேயே சில சர்ச்சைகளிலும் அவர் சிக்கினார்.

#image_title
அப்போது ரஜினிதான், அவரை அழைத்து ஊடகங்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருங்கள் எனக் கூறினாராம். அவரின் அறிவுரையைக் கேட்டுதான் அஜித் இப்படி மாறினார் என சொல்லப்படுகிறது. கலைஞரின் பாராட்டு விழா நிகழ்ச்சியில் அஜித் தைரியமாக நடிகர்கள் மிரட்டப்படுவதாக சொன்னபோது அதை எழுந்து நின்று கைதட்டி பாராட்டியவர் அஜித். அதற்காக அஜித் மேல் கலைஞர் கோபமாக இருந்த போது அவரை அழைத்துச் சென்று கலைஞரை பார்க்க வைத்து சமாதானமும் செய்தார்.
இப்படி அஜித்துக்கும் ரஜினிக்கும் பல ஆண்டுகளாக நெருக்கமான நட்புறவு உள்ளது. அஜித், ரஜினியை தன்னுடைய குருவாகவே பார்க்கிறார். இந்நிலையில்தான் 2011 ஆம் ஆண்டு அஜித் அளித்த ஒரு நேர்காணலில் தான் ரஜினிக்கு வில்லனாக நடித்து அவர் கையால் தோற்கடிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் அது தன்னுடைய வாழ்நாள் ஆசை என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது வரை அந்த ஆசை நிறைவேறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
