ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்ஹாசன்.. காரணத்தைக் கேட்டால் நீங்களே ஆடிப் போயிருவீங்க..!

By Nanthini on கார்த்திகை 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டு காலமாக யாராலும் அசைக்க முடியாத மாபெரும் நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த 1975 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வராகங்கள் என்ற திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களோடு இணைந்து நடித்த தன்னுடைய கலை பயணத்தை தொடங்கியவர் ரஜினி. அதுவரை தமிழ் திரையுலகை பொருத்தவரை சற்று நிறம் கூடுதலாக உள்ளவர்கள் மட்டுமே பெரிய ஹிட் நடிகர்களாக மாற முடியும் என்ற ஒரு பிம்பம் இருந்தது. ஆனால் அதனை சுக்குநூறாக உடைத்து கருமையும் அழகுதான் திறமை மட்டும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என ரஜினி நிரூபித்தார்.

ரஜினி, கமல்... இன்றும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸை ஆளும் நாயகர்கள்! |  actor rajini and kamal the duo rule tamil cinema kollywood here how -  hindutamil.in

   

ரஜினி மற்றும் கமல் நட்பு உலகம் அறிந்தது தான். இவர்களுக்குள் தொழில் போட்டு இருந்தாலும் ஒருவரை ஒருவர் எந்த இடத்திலும் விமர்சித்து பேசியோ அல்லது பஞ்சு வசனங்களோ என எதுவுமே இல்லாமல் இருவரும் ஆரோக்கியமான போட்டியால் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்கள். ரஜினியின் நடிக்க வந்த புதிதில் கமல்ஹாசன் அப்போது வளர்ந்து கொண்டிருந்த பெரிய ஹீரோவாக இருந்தார். இவர்கள் இருவருக்குமே சினிமா உலகில் முக்கிய அடையாளத்தை கொடுத்தது கே பாலசந்தர்தான். இப்படி தன் குருநாதரின் படங்கள் சிலவற்றில் ஆரம்ப காலகட்டத்தில் கமல் மற்றும் ரஜினி பல திரைப்படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்தனர்.

   

எனக்கும் ரஜினிக்கும் சம்பளம் கொடுத்துட்டா படத்தை எப்படி எடுப்பீங்க?- கமல்  கேள்வி | Will Kamal sharing screen with Rajini? Here is the answer! - Tamil  Filmibeat

 

 

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்க வேண்டாம், அப்படி நடித்தால் உங்களுக்கான ஒரு தனி அடையாளம் இல்லாமல் போய்விடும். எம்ஜிஆர் சிவாஜி போல வரும் காலத்தில் கமல் ரஜினி என்று அனைவரும் பேச வேண்டும், இதனால் இருவரும் தனித்தனி பாதையில் பயணிப்பதே நல்லது என கமல்ஹாசன் கூறியுள்ளார். கமல் கூறிய அறிவுரையை கேட்டு ரஜினியும் தனிப் பாதையில் பயணிக்க தொடங்கினார்.

ரஜினியுடன் கமல் சந்திப்பு - வைரலாகும் புகைப்படங்கள் | kamal hassan meet  rajini over vikram movie promotion - hindutamil.in

அப்படி பல படங்களில் ரஜினி ஹீரோவாக நடித்தார். இவருக்கு கதாநாயகன் என்ற அந்தஸ்தை பெற்று தந்தது பைரவி திரைப்படம் தான். கலைஞானம் தயாரிப்பில் படம் வெளியீட்டுக்கு தயாரான போது பல நிதி நெருக்கடிகளை சந்தித்துள்ளது. அதனால் படம் வெளியாவதற்கும் தாமதம் ஏற்பட்ட நிலையில் இதனை அறிந்த கமல்ஹாசன் ஒரு லட்சம் ரூபாய் நிதி கொடுத்து உதவியுள்ளார். இன்று நான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு இருக்கிறேன் என்றால் அதற்கு என் நண்பர் கமல்ஹாசனும் ஒரு முக்கிய காரணம் என்று ரஜினி பல பேட்டிகளில் கூறியுள்ளார்.