#image_title
நடிகர் கமலஹாசன் புதிய தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வதற்காக அமெரிக்கா செல்ல இருக்கின்றாராம்.
தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் கமலஹாசன். சினிமாவில் அனைத்து துறைகளிலும் கை தேர்ந்தவராக திகழும் கமலஹாசன் தற்போது இருக்கும் தலைமுறைக்கு டப் கொடுக்கும் நபர். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதனை கற்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணக்கூடியவர்.
தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட புதிய புதிய நுட்பங்களையும் டெக்னாலஜிகளையும் புகுத்தியவர் கமலஹாசன். தமிழ் சினிமாவை பாலிவுட் சினிமா அளவிற்கு தரம் உயர்த்தியதில் இவரின் பங்கும் உண்டு. சமீபகாலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த கமலஹாசன், விக்ரம் திரைப்படத்தின் மூலம் ரிஎன்றி கொடுத்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.
இதையடுத்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். ஒரு பக்கம் திரைப்படங்களில் நடிப்பது மறுபக்கம் தனது தயாரிப்பு நிறுவனத்தில் புதிய புதிய திரைப்படங்களை தயாரிப்பது என்று பிசியாக இருந்து வருகின்றார், மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகின்றார், இவர் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
வசூல் ரீதியாகவும் அடிவாங்கி இருக்கின்றது. இந்நிலையில் கமலஹாசன் தற்போது 90 நாள் இந்தியாவிலேயே இருக்க மாட்டாராம். அனைவரும் தற்போது தங்களது படங்களில் ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி வருகிறார்கள். அதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கும் கமலஹாசன் அதற்காக அமெரிக்கா செல்ல இருக்கின்றார். தக்லைப் திரைப்படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு அந்த டெக்னாலஜியை கற்றுக் கொள்வதற்காக அமெரிக்கா செல்ல இருக்கின்றார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நூற்றுக்கணக்கான பயணிகளுடன் நடுவானில் அதிவேகத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில், எதிர்பாராதவிதமாகப் பயணிகள் சிலருக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. சீட்…
ஹைதராபாத்தில் உள்ள துர்க்கம் செருவு பகுதிக்கு அருகில் அமைந்துள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்திற்கு வெளியே, செப்டம்பர் 17…
பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையில் மண்டியா அருகே உள்ள உம்மடஹள்ளி கேட் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. அதிவேகமாகச்…
இந்திய வரலாற்றையே உலுக்கிய 2006-ஆம் ஆண்டின் 'நிதாரி தொடர் கொலை வழக்கு' குற்றவாளியான சுரேந்தர் கோலி, ஹரித்வாரில் உயிரிழந்ததாக வெளியான…
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு மலைப் பகுதியில் செப்டம்பர் 16 அன்று மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து சரிந்து…
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு தகவலாகும். லாகோஸில் உள்ள ஸ்விஃப்ட்-மெட் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்குவரத்து…